இடுகைகள்

இலக்கணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத

உலகில் அதிகம் வெறுக்கப்படும் வார்த்தைகள்!

படம்
giphy MOIST ஈரப்பதம், ஈரக்கசிவு என பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தையை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெறுக்கின்றனர். இப்போது பேக்கரி விளம்பரம் வருகிறது. அதில் எங்கள் கேக் மிகவும் ஈரப்பதமான விதத்தில் இருக்கும். உங்களுக்கு சாப்பிடப்பிடிக்கும் என்பதற்கு சூப்பர் மாய்ஸ்ட் என்று பயன்படுத்தினால் அந்த விளம்பரம் வெற்றி பெறாது. பொருளும் மக்கள் வாங்குவது சந்தேகம். மேலும் சிலர் இதனை ஆபாசப்படங்களில் பயன்படுத்தும் வார்த்தையாகவும் பொருள் கொள்கின்றனர். இதனை எந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  DROOL உணவை எச்சில் வழிய பார்ப்பது என்பதுதான் இதன் பொருள். நாவல், கவிதை, பத்தி எழுத்து என அனைத்திலும் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அப்புறம் ஒருகட்டத்தில் ச்சீ  என்ன இது நாகரிகமில்லாமல் என்று மக்களுக்கு தோன்றியதால் இச்சொல்லை ஒரங்கட்டிவிட்டனர். PANTIES பெண்களின் உள்ளாடை. கூகுள் இறுக்கமான காற்சட்டை என பதில் தருகிறது. இதனை பெண்கள் வெறுக்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. உள்ளாடைகளை வெறுக்கவில்லை. இந்த சொல்லை வெறுக்கிறார்களாம். வுமன் அண்டர்வேர்