இடுகைகள்

பட்ஜெட் 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா