இடுகைகள்

பாலின பேதமற்ற ஃபேஷன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் ஆடையை ஆண்களும் அணியலாம்!

படம்
வேறுபாடுகளை உடைக்கும் ஃபேஷன்! – -ச.அன்பரசு இந்தி நடிகர் ரன்வீர்சிங், பாஜிராவ் மஸ்தானி படவிழாவில் அணிந்த பெண்களின் ஸ்கர்ட் போன்ற உடை அவரை பிறரைக் காட்டிலும் பிரபலமாக்கியது. பாலின பேதமற்று உடைகளை இரு பிரிவினரும் அணியலாம் என்ற ஃபேஷன் பாய்ச்சலை இளசுகளின் நரம்பில் குளுக்கோஸாக ஏற்றும் உலகறிந்த ரோல்மாடல்களில் நடிகர் ரன்வீர்சிங்கும் ஒருவர். ஃபேஷன் உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அடிப்படை நாம் வாழும் சமூகம்தான். உச்சநீதிமன்றம் 377 வது சட்டப்பிரிவுப்படி எல்ஜிபிடிக்யூ இனக்குழுவை குற்றவாளிகள் அல்ல என்று கூறி உத்தரவிட்டது முக்கியக்காரணம். இதன்பின்னர் இந்தியாவில் தம் பாலின அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்தியவர்களில் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை அடக்கம். இங்கிலாந்தில் கிரடிட் சூசி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரான பிலிப் பன்ஸ், ஆண்,பெண் என இரண்டு பெயர்களை பயன்படுத்தி வாழ்ந்து வந்ததோடு பெண்களுக்கான விருது விழாவில் பங்கேற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். “ஆண்-பெண் தன்மைற்ற கதாபாத்திரங்கள் மகாபாரதத்திலேயே உண்டு. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் மற்றும் ச