இடுகைகள்

பாகிஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங்கி வந்தார். ச

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பா

பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

படம்
  ”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்” உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது.  உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.   பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம

ஜோபைடன் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே வாய்ப்பு அதிகம்! - மைக்கேல் குஜெல்மேன்

படம்
              மைக்கேல் குஜெல்மேன் தெற்காசியாவுக்கான வில்சன் சென்டர் துணை இயக்குநர் அமெரிக்க அதிபராகியுள்ள ஜோ பைடனுக்கு அடுத்துள்ள சவால்கள் என்ன ? அவர் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் ? பைடன் இப்போதைக்கு உள்நாட்டில் உள்ள அவசரகால நிலைமையை கவனிக்க வேண்டும் . இப்போது பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விஷயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன . அவை , பெருந்தொற்று , பொருளாதாரம் , இனவெறி , பருவச்சூழல் ஆகியவையாகும் . இவற்றை எக்சிகியூட்டிவ் ஆர்டராக பைடன் கையெழுத்திட்டு செயல்படுத்த உள்ளார் . அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டம் , பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குடியேறுவதற்கான தடை ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார் . இதனால் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவில் உருவாக்கப்படாமல் போகவில்லை . அவர்கள் விரைவில் பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் இணைய உள்ளனர் . அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் மேலும் பல்வேறு ஆணைகள் செயல்பாட்டிற்கு வரும் . உள்நாட்டுப் பாதுகாப்பு , குவான்டினாமோ சிறை மூடல் ஆகியவற்றையும் இதில் இணைப்பார்கள் . ஆப்கானிஸ்தானில் படைகள

போலியோவை அழித்தது இந்தியாவின் சாதனை!

படம்
போலியோவை அழித்தது இந்தியாவின் முக்கியமான சாதனை! தாமஸ் ஆபிரஹாம் உங்களுக்கு போலியோ பற்றிய அக்கறை ஏற்பட்டது எப்படி? இத்துறை உங்களுக்கு புதிதானது ஆயிற்றே? 2003ஆம்ஆண்டு சார்ஸ் பாதிப்பு பரவியபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். அப்போதே அதுபற்றிய நூலை எழுத முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சார்ஸைப் போலவேதான் கொரோனாவும் கூட. நுண்ணுயிருகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது நீண்டது. பழமையான வரலாற்றைக் கொண்டது. நாம் இறந்துபோனாலும் இந்த நுண்ணுயிரிகள் பூமியில் அப்படியே இருக்கும். இப்படி சுழற்சி நடைபெறுவதால் நாம் போலியோவை அழித்துவிட்டோம் என்று சொல்வது சரியானதாக எனக்குப் படவில்லை. பாகிஸ்தானில் இன்னும் போலியோ அழிக்கப்படவில்லை. இது போலியோ அழிக்கும் முயற்சியில் பின்னடைவு அல்லவா? ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் போலியோ இன்னும் அழிக்கப்படாமல் இருப்பது வேதனையான நிகழ்ச்சிதான். 2011ஆம் ஆண்டு போலியோ இந்தியாவில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலியோசொட்டு மருந்து மீதான நம்பிக்கையின்மையும் வளர்ந்து வருகிற ஆபத்து. மேலும் அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் ஆகியோருக்கு இடையில

சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை உசுப்பியவை ஃபைஸின் கவிதைகள்!

படம்
2 கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸ் 1979ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதினார். அதன் பெயர் ஹம் தேக்கேங்கே. இக்கவிதை இன்று சர்ச்சையாகி வருகிறது. இதுபற்றி அவரது பேரன் உளவியல் மருத்துவர் அலிமாதி ஹஸ்மியிடம் பேசினோம். ஆங்கிலத்தில் - சோனம் ஜோஷி உங்கள் தாத்தா இறந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரின் கவிதை இக்காலகட்டத்திற்கும் பொருந்தும்படி இருப்பதைப் பற்றி சொல்லுங்கள். என் தாத்தா கிண்டலாக சொல்லுவார். பாகிஸ்தானின் நிலைமை மாறப்போவதில்லை. அதேபோல, என் கவிதைக்கும் வயது ஏறப்போவதில்லை. தாத்தாவின் கவிதை மீது சர்ச்சை ஏற்படுத்தி கான்பூர் ஐஐடி பேராசிரியரும், இந்திய பிரதமருமான மோடிஜியும் கவிதையை தீர்க்கமாக தங்கள் செயலின் மூலம் ஆமோதிக்கிறார்கள். உங்கள் தாத்தா எழுதிய கவிதையை தேசவிரோதம் என்று குற்றம் சாட்டி கான்பூர் இதற்கென தனி குழுவை அமைத்துள்ளதே? ஆம் என் தாத்தா தேசியவாதி கிடையாது. அவர் உலகவாதி. ஆசிய துணைக்கண்ட நாடுகளில் உள்ள அனைவரையும் தன் சகோதரர்களாகவே அவர் நினைத்தார். தன் படைப்புகளையும் அப்படியே எழுதினார். இன்று அது சட்டவிரோதம். தேசத்திற்கு எதிரானது என்று அரசால் கூறப்பட்டு

நேரத்தை வீணாக்கிய சாணக்கியத்தனம்! - சாணக்கியா படம் எப்படி?

படம்
சாணக்கியா இயக்கம் - திரு ஒளிப்பதிவு - வெற்றி பழனிசாமி இசை - விஷால் சந்திரசேகர் ஆஹா கோபிசந்த் மட்டும்தான். கூடவே துணைக்கு விஷால் சந்திரசேகர். வேறு யாருமில்லை. ஒளிப்பதிவாளர் சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். ஐயையோ மற்ற எல்லாமும்தான். மெஹ்ரின் பிர்சாதா, பாட்டுக்கான நாயகியாக மாறிவிட்டார். தன் குடும்பத்தைப் பற்றிப் பேசும் இடம் மட்டும்தான் தேறுகிறது. ஹீரோ எப்போதும் தன் நண்பர்கள் சகிதமாக இருக்கிறார். அவர்களுக்காக சண்டை போடுகிறார். ஓடுகிறார். அடிக்கிறார். ரா தலைவருக்கே கட்டளைகள் பிறப்பிக்கிறார். கதை: நண்பர்களைக் காப்பாற்றும் ரா ஏஜெண்டின் கதை. எப்படி இருக்க வேண்டும் என நினைப்பீர்களோ அப்படியெல்லாம் இல்லை. கதையும் பிரமாண்டம் என்றால் படத்தையும் அப்படித்தானே எடுக்கவேண்டும்? படத்தில் எந்த விஷயமும் அப்படி இல்லை. குத்துப்பாடலில் அறிமுகமாகும ஜரின் கானைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். மெரினை இம்மியளவும் ஏற்க முடியவில்லை. திணிப்பாகவே இருக்கிறது. பின்னே பாட்டு வெச்சாச்சு. அதுக்கு ஒரு பொண்ணு வேண்டாமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அலி, சுனில் ஆகியோரை வீணடித்து இருக்கிறார

கவிதைகளை உயிர்ப்பிக்கும் டெக் வல்லுநர்!

படம்
பஞ்சாப் கவிதைகளை உயிர்ப்பிக்கும் பாக்.டெக் வல்லுநர்! அபிதின் பத்து வயதில் அவரது தந்தை அவருக்கு பஞ்சாபி சூபி நூல்களின் தொகுப்பை வாசிக்க கொடுத்தார். அதிலிருந்து கவிதைகள் அனைத்தும் படிக்கும் போதே அபித்துக்கு பெரும் பரவசத்தைத் தந்தன. அப்போது அவரின் வீட்டின் பெற்றோர் தங்களுக்குள் பஞ்சாபி பேசினாலும் குழந்தைகளிடம் உருதில் பேசினர். நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அங்கு பஞ்சாபியைப் பேசுவது மிக குறைவு. அப்படிப் பேசினாலும் அதனை சிலர் கொச்சையாக நினைக்கின்றனர். தற்போது பஞ்சாபி மொழிக்காக ஃபோக்பஞ்சாப் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். அதோடு இம்மொழிக்கான அகராதியையும் உருவாக்கியுள்ளார் அபித். நன்றி: தி டைம்ஸ்

பாக். நம்மை தாக்க தேர்ந்தெடுத்துள்ள விமானம்

படம்
பாக். நம்மைத் தாக்கும் ஆயுதம்! சீனா மார்னிங் போஸ்ட் பீஜிங் பாக்குடன் நட்பு பாராட்டி தன் வணிகப்பயன்களை உருவாக்கி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். ரஷ்யாவின் மிக் விமானத்திற்கு பதிலடியாக, அமெரிக்காவின் எஃப் 16 மூலம் தாக்குதல் நடத்திய பாக். அரசு தற்போது அடுத்த தாக்குதலுக்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. ஆனால் இச்செய்தி வெளியானதும் சீனா தீர்க்கமாக மறுத்துள்ளது.  ஜே.எஃப் 17 போர் விமானத்தை பாக். பயன்படுத்த உள்ளதாக வந்த செய்திதான் சீனாவை பதற்றப்படுத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் கண்டெடுத்து வந்த விமானப்பகுதிகள் எஃப் 16 விமானத்தைச் சேர்ந்தவை. ஆனால் தாக்குதலுக்கு பயன்பட்டது. ஜேஎஃப் 17 விமானங்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் விமானத்துறை அதிகாரி பேட்டியளிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது.  பாக். அரசு இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என அடம்பிடிக்க, இந்தியா ஒரு விமானம்தான் சுடப்பட்டது. அது மிக் பைசன் 21 என்ற விமானம் என ஒப்புக்கொண்டது.  சீனாவின் விமானம் இதற்கு பயன்பட்டது என்பது உறுதியானால்,  செங்க்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன்(CAC) தயாரித்த  ஜேஎஃப் -17, முதன்முதலில

பிரிவினையைத் தூண்டும் தாக்குதல்கள்

படம்
globalvoices.org காஷ்மீரில் நாற்பது ராணுவ வீர ர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தனர். நிச்சயம் இது வருத்தப்படவேண்டிய  நிகழ்ச்சிதான். அதற்காக காஷ்மீர் இளைஞர்கள் முழுவதும் இந்த சம்பவத்துக்கு காரணம் என அடித்து விரட்டினால் மக்கள் எங்கே போவார்கள்? பாஜக தனது கரசேவகர்களை சரியாகப் பயன்படுத்தி இந்த சம்பவத்தின் மூலமே ஆட்சியைப் பிடிக்க தயாராகி வருகிறது. எப்போதுமே தேர்தலுக்கு முன் ஓரிடத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரஞ்சுக் கட்சியின் வழக்கம். தற்போது டேராடூன், பஞ்சாப், ஜம்மு ஆகிய இடங்களில் மாணவர்கள் அரசின் இரும்பு பிடியில் மாட்டியுள்ளனர். இதுதான் வாய்ப்பு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் படை முஸ்லீம்களை தாக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித் அகமது கான் என்பவரை வந்தே மாதரம் சொல்லச்சொல்லி மூக்கில் குத்தி தாக்குதலை நடத்தியுள்ளது வலதுசாரி குண்டர்கள் படை. இதேபோல நாடெங்கும் காஷ்மீரிகள் உள்ள இடத்தில் அவர்களை குறிவைத்து தாக்கத்தொடங்கியுள்ளது இந்து குண்டர்கள் படை. ஏறத்தாழ இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றிதான். முஸ்லீம்களைக் கொண்ட பாகிஸ்தானாக அவர்கள் இருக்கையில், நாம் இந

பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது

படம்
scroll.in புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார். ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா? நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன். நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில