சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை உசுப்பியவை ஃபைஸின் கவிதைகள்!





Image result for poet faiz ahmed faiz







2
கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸ் 1979ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதினார். அதன் பெயர் ஹம் தேக்கேங்கே. இக்கவிதை இன்று சர்ச்சையாகி வருகிறது. இதுபற்றி அவரது பேரன் உளவியல் மருத்துவர் அலிமாதி ஹஸ்மியிடம் பேசினோம்.

ஆங்கிலத்தில் - சோனம் ஜோஷி

உங்கள் தாத்தா இறந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரின் கவிதை இக்காலகட்டத்திற்கும் பொருந்தும்படி இருப்பதைப் பற்றி சொல்லுங்கள்.

என் தாத்தா கிண்டலாக சொல்லுவார். பாகிஸ்தானின் நிலைமை மாறப்போவதில்லை. அதேபோல, என் கவிதைக்கும் வயது ஏறப்போவதில்லை. தாத்தாவின் கவிதை மீது சர்ச்சை ஏற்படுத்தி கான்பூர் ஐஐடி பேராசிரியரும், இந்திய பிரதமருமான மோடிஜியும் கவிதையை தீர்க்கமாக தங்கள் செயலின் மூலம் ஆமோதிக்கிறார்கள்.

உங்கள் தாத்தா எழுதிய கவிதையை தேசவிரோதம் என்று குற்றம் சாட்டி கான்பூர் இதற்கென தனி குழுவை அமைத்துள்ளதே?

ஆம் என் தாத்தா தேசியவாதி கிடையாது. அவர் உலகவாதி. ஆசிய துணைக்கண்ட நாடுகளில் உள்ள அனைவரையும் தன் சகோதரர்களாகவே அவர் நினைத்தார். தன் படைப்புகளையும் அப்படியே எழுதினார். இன்று அது சட்டவிரோதம். தேசத்திற்கு எதிரானது என்று அரசால் கூறப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தன்னுடைய நாட்டு மக்களின் பிரச்னைகள் என்று பார்க்காமல் உலக மக்களின் பிரச்னைகளையும் தன்னுடையதாகவே அவர் பார்த்தார். ஐஐடி கான்பூர் கவிதையின் ஜனநாயகப்பூர்வத் தன்மையைக் கவனிக்கவே இல்லை. இன்று இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் ஜாமியா, ஜேஎன்யூ போராட்டம் போலவே நாங்களும் இந்த கவிதைக்கு ஆதரவாகப் போராடுவோம்.

ஏராளமான கட்டுரைகளில் ஃபைஸ் பாகிஸ்தானி கவிஞர் என்று கூறப்படுகிறதே?

ஃபைஸ் பாகிஸ்தானியர் என்பது தவறான தகவல். அவர் 1911ஆம் ஆண்டு இந்தியாவில்தான் பிறந்தார். பள்ளி, கல்லூரியில் படித்த தும் இங்குதான். பின்னர் தனக்கான வேலையை அமிர்தசரஸில் தேடிக்கொண்டார். 1941ஆம் ஆண்டு அவருக்கு திருமணமானது. அதற்குப் பிறகு, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அவர் பாகிஸ்தானியர் என்று கூறப்படுவது 36 வயதுக்குப்பிறகுதான். இந்தியா, பாகிஸ்தான் என மக்களை அவர் என்றுமே பாகுபடுத்திப் பார்க்கவில்லை. அனைவரும் தன்னுடைய மக்கள் என்றே படைப்பிலும் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு மாமி விழாவில் ஃபைஸ் எழுதிய படம் திரையிட மறுக்கப்பட்டது, அவரின் மனைவி டில்லிக்கு வரவிருந்த விழாவுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இவை பற்றி சொல்லுங்கள்.

காரணம், ஃபைஸின் கவிதைகள். அவை சர்வாதிகாரத்தை, அரசை , மனிதநேய மறுப்பாளர்களை கேள்வி கேட்கிறது. சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் போராடுபவர்களுக்கு என்றுமே துணை நிற்பது ஃபைஸின் கவிதைகள். இதை தாங்க முடியாமல்தான் இத்தகையை செயல்களில் அரசு ஈடுபடுகிறது. 

நன்றி- டைம்ஸ், ஜன.5, 2020