அட்டகாசமான ரகசிய உளவாளியின் கதை- ருத்ரநேத்ரா




Image result for ருத்ரநேத்ரா எண்டமூரி வீரேந்திரநாத்


ருத்ர நேத்ரா

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில் - கௌரி கிருபானந்தன்


ருத்ர நேத்ரா, ஒரு மணிநேரத்தில் விறுவிறுவென படிக்கவேண்டிய நூல். கதை இளமையும் குறும்பும் கொண்ட சீக்ரெட் ஏஜெண்ட் நேத்ரா எதிர்கொள்ளும் வழக்கு பற்றியது. அந்த வழக்கை அவர் மேலதிகாரி சிறிய வழக்கு என்று கூறி அவரிடம் கொடுக்கிறார். ஆனால் அந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான், புளூட்டோனியம், விஷவாயு ஆராய்ச்சி என நினைத்து பார்க்க முடியாதபடி நீள்கிறது. இதற்கிடையில் சீக்ரெட் ஏஜெண்டுகளின் அலட்சியத்தால் நேத்ராவின் நண்பனும் தங்கையும் பலியாகிறார்கள். இதற்கு காரணமான பிளாக் ஈகிள், அவனது மகன் ஏஜெண்ட் க்யூ இருவரையும் நேத்ரா என்ன செய்தான், அவனை வெறித்தனமாக காதலிக்கும் தொழிலதிபர் பூஷணத்தின் மகள் அம்சரேகா, சந்தேகிக்கும் வளர்ப்பு மகள் சுவர்ணரேகா, இவர்களின் காதலை பொறாமையோடு பார்க்கும் பிரதிமா ஆகியோரின் காதல் பகுதிகளும் நூலில் உண்டு.


தேசப்பற்று போதிக்கும் கதை. எளிதாக நம்மை வாசிக்க வைப்பதில் எண்டவீரி வென்றுவிடுகிறார். கதை விறுவிறுவென செல்கிறது. இதில் காமெடி அத்தியாயங்களை சக பெண் சீக்ரெட் ஏஜெண்ட் பிரதிமா மற்றும் அவரது பாட்டி பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் படுசீரியசான சூழலிலும் வரும் நகைச்சுவை அபாரம்.

இதில் எதிர்மறையாக எங்களுக்கு பட்டது, அம்சரேகா பாத்திர படைப்பு. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் பெண்ணுக்கு செக்ஸ் என்றால் தெரியாது. எப்படி குழந்தை பிறக்கிறது என்று தெரியாது என ஆசிரியர் சொல்வது எவரெஸ்டுக்கு பூமாலை சுற்றுவது போல உள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்கும் பெண், அந்த மாதிரியான நூல்களை பார்த்திருக்க கூட மாட்டாளா?  அம்சரேகாவின் காதல் போர்ஷன்கள் வேகமெடுக்கும் கதைக்கு வேகத்தடை. மற்றபடி கதையின் போக்கு, திருப்பங்கள் என அனைத்தும் ரசிக்கத்தக்க விதமாக உள்ளன. இந்த கதை எல்லைக்கோடுகளை தாண்டிச்செல்வது. இதனால்தான் இன்டர்போல் தலைவர் பேசும்போது கூட நேத்ரா, பெண்ணின் ஜாக்கெட்டை ஸ்கேன் செய்து பார்க்க முடிகிறது. இளமையும் குறும்புமான எழுத்து இவரின் பெரும் பலம்.


கோமாளிமேடை டீம்










பிரபலமான இடுகைகள்