இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!



Image result for ecofeminist Chris Cuomo



நேர்காணல்

கிறிஸ் குவோமோ, சூழலியலாளர்

பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி?

நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை.

பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ

ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள் வேறுவிதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சூழலியல் பெண்ணியம் என்பது வளர்ச்சிக்கு எதிரானது என தொழில்துறையினர் கூறுகிறார்களே?

சூழலியல் பெண்ணியம் என்பது உறுதியாக முதலாளித்துவம் மற்றும் காலனிய ஆதிக்கத்திற்கும் அதன் மதிப்புகளுக்கும் எதிரானதே.

செழிப்பு என்பது கெட்ட வார்த்தை கிடையாது. ஆனால் அது ஏன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைக்கிறது. அனைவரும் வளர்ச்சி பெறுவதே எங்கள் நோக்கம். இவர்கள் பதறுவதன் நோக்கம், இவர்கள் வைத்திருக்கும் வளமை பிறரின் நலனைக் கெடுத்து பெற்றது. அதனால்தான் அதற்கு எதிரான குரலைக் கண்டு நடுங்குகிறார்கள். வளர்ச்சிக்கு எதிரி என புலம்புகிறார்கள். அனைவருக்குமான தாய்மை பொருளாதாரத்தையே உருவாக்க நாங்கள் முனைகிறோம்.

இம்முறையில் வெற்றிகண்ட நிறுவனங்கள் இருக்கிறதா?

ஐரோப்பாவில் சூழலியலுக்கான பல்வேறு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பலர் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றனர். 

நன்றி - டைம்ஸ்




பிரபலமான இடுகைகள்