வீடியோ எடிட்டிங்கிற்கான லேப்டாப்கள்!



வீடியோ எடிட்டிங் என்பது இன்றைக்கு முக்கியமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு தகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம், அனைத்து விஷயங்களும் இன்று எழுத்துக்களை விட வீடியோ வடிவில் பகிரப்படுகிறது. எனவே அதற்கான விஷயங்களை உடனே நீங்கள் செய்வது அவசியம். இதற்காகவே உதவும் லேப்டாப் ஐட்டங்களை இங்கே பகிர்கிறோம்.

MacBook Pro 16-inch


மேக் புக் புரோ 

16 இன்ச் திரை கொண்ட லேப்டாப். விலை ஆப்பிள் வகைக்கு உண்டானபடி அதிகம்தான். அமேசானில் செக் செய்து விலையை சோதித்துக்கொள்ளுங்கள். மென்பொருட்கள், வன்பொருட்கள் அனைத்துமே மேக்கில் சூப்பராக இருக்கும் என்பதால் எந்த ஃபார்மேட் வீடியோவையும் நீங்கள் எடிட் செய்து அதகளப்படுத்தலாம். புதிய மேம்படுத்தப்பட்ட கீபோர்டு நன்றாக இருக்கிறது.

Image: HP

ஹெச்பி என்வி 

லேப்டாப்களில் ஆல்ரவுண்டர் இதுதான். விலைக்கு ஏத்த பணியாரம்தான் என்றாலும் ருசிக்கிறது. 4கே வீடியோ வசதி கிடையாது.முழு ஹெச்டி திரை வீடியோ வேலைக்கு அம்சமாக இருக்கிறது. எடை 1.3 கிலோதான். 4 ஜிகா ஹெர்ட்ஸ் ஐ 5 - ஐ 7 சிப்கள் 1080 வீடியோவை எடிட் செய்வதற்கு எந்த பிரச்னையும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு மிஞ்சிய தரத்திலான வீடியோக்களை எடிட் செய்யும்போது திணறுகிறது.



Product shot of Dell Inspiron 14 5000


டெல் இன்ஸ்பிரான் 14 5000

மத்திய விலை அளவில் ரசிக்கும் விதமாக இருக்கிறது டெல் இன்ஸ்பிரான். எட்டாம் தலைமுறை சிப் செட்டோடு சிம்பிளான வீடியோக்களை எடிட் செய்ய எந்த பிரச்னையுமில்லை. அனைத்து கணினிகளுக்கும் லிமிட் என்று ஒன்று உண்டு அல்லவா? 4 கே வீடியோக்களை இதில் பதிவிட்டு எடிட் செய்வது கடினம். மற்றபடி சிறப்பாகவே பணியாற்றுகிறது இந்த லேப்டாப்.
Razer Blade 15 Studio Edition


ரேஷர் பிளேடு ஸ்டூடியோ எடிஷன் 

முதலிலேயே சொல்லிவிடுகிறோம். இந்த லேப்டாப் காசு அதிகம்தான். கணினியில் விளையாடுபவர்களுக்காக கணினி தயாரித்து வந்தவர்கள் என்பதால், கணினி பணியாற்றும்போது சர்வோ ஆயில் ஊற்றியது போல பாய்கிறது. ஆனால் இது அனைவருக்கும் ஏற்றது அல்ல. முழுக்க வீடியோ எடிட்டர்களை மனதில் வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மானிட்டர்தான் லேப்டாப்பில் மிகவும் கவனமாக பாதுகாக்கவேண்டிய பகுதி. திருஷ்டி சுற்றி போடும்படி அழகாக இருக்கிறது.

நன்றி- கிரியேட்டிவ் பிளாக்