சிஇஎஸ் 2020 - கருவிகளில் என்ன புதுசு?
அமெரிக்காவில் சிஇஎஸ் விழாவில் ஏராளமான புதிய எலக்ட்ரிக் பொருட்கள் வெளியிடப்படும். அதில் சில அமேசிங்காக இருக்கும். சில ஐயையோ என்று சொல்ல வைக்கும். நமக்கு எதுவாக இருந்தாலும் அதில் புதுமையான கான்செப்ட் முக்கியம். அப்படி வியக்க வைத்த சில பொருட்கள் உங்களுக்காக....
காரில் கண் கூசாது
ஜெர்மனி நிறுவனமான போச் நிறுவனத்தின் தயாரிப்பு. சாதாரணமாக சூரிய ஒளி கண்களில் ஏற்படுத்தும் கூச்சத்தைத் தவிர்க்க காரில் வசதிகள் உண்டு. அதனை டிஜிட்டலாக மாற்றியுள்ளனர். கண்கூசுவதைத் தடுக்கும் பொருள் இப்போது எல்சிடி திரையாக மாறியுள்ளது. இதில் உள்ள கேமரா சூரிய ஒளி நம் முகத்தில் படும் இடத்தை மட்டும் நிழலாக மாற்றி விபத்துகளிலிருந்து காக்கிறது. விழாவில் சோதித்தபோது கண்களில் நிழல் ஏற்பட சிறிது நேரம் தேவைப்பட்டது.
செக்வே எஸ் பாட்
பிக்சாரின் வால் இ படத்தில் காப்பியடித்து செய்தது போலவே இருக்கின்றன இந்த வாகனங்கள். எதிர்காலத்தில் விமானநிலையத்தில் உங்களை அழைத்துச்செல்லும் வண்டிகளாக இவை இருக்கலாம்.
பாட் செஃப் - சாம்சங்
எதிர்காலம் தானியங்கி கருவிகள்தான் என சாம்சங் உறுதியாக உள்ளது. தற்போது தானியங்கி கருவியால் சமையல் செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளது சாம்சங். கண்காட்சியில் காபி போட, சமையல் செய்ய என அனைவரையும் அசரடித்தது பாட் செஃப்.
பெட்டிட் க்யூபோ
இது ஒரு எலி வடிவ தலையணை. இதன் பெயரைச் சொன்னால், வாலைத் தொட்டாலோ தன் வாலை ஆட்டும். தலையில்லாத எலி என்று புரிந்துகொள்ளுங்கள். இதெல்லாம் கண்டுபிடிப்பா என்கிறீர்களா? இதுவும் கண்டுபிடிப்புகளில் சேர்த்திதான். நாய், பூனைகள் சகிதமாகத்தானே அமெரிக்கர்கள் தூங்குகிறார்கள். அப்புறமென்ன கேள்வி....
நன்றி- பிபிசி