லஜபதிராய் இந்து, முஸ்லீம் பிரச்னையை முன்னதாகவே அடையாளம் கண்டார்!


Madhav Khosla | The Indian Express
மாதவ் கோஸ்லா படம்- இந்தியன் எக்ஸ்பிரஸ்

மக்கள்தான் அவர்களுக்கான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்


மாதவ் கோஸ்லா, அசோகா பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா சட்டப்பள்ளி ஆகிய அமைப்புகளில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
ஆங்கிலம் மூலம்: நளின் மேத்தா


இந்திய அரசியலமைப்பு சிஏஏ போன்ற சட்டங்களை ஏற்பது சரியானதா?

இல்லை. அது தவறானது. மக்கள் உருவாக்கும் சட்டங்களில் இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடாது. நான் இவற்றை அரசியலமைப்புச்சட்டத்தில் இணைக்க விரும்பவில்லை.


லாலா லஜபதி ராய் தன் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் இந்துத்தவ பார்வையைக் கொண்டிருந்தாரா?

லாலா லஜபதி ராய் முக்கியமான அரசியல் ஆளுமை. அவர் வாழும் காலத்தில் மதத்தைப் பின்பற்றினால் அது பெரிய சிக்கலாக மாறும் என்பதை மனப்பூர்வமாக அறிந்திருந்தார். இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் ஆகியவற்றுக்கு இடையில் எழும் வேறுபாடுகளையும் அவர் அடையாளம் கண்டார். அன்றைய காலத்தில் அம்பேத்கருக்கும், லாலா லஜபதிராய்க்குமான மதரீதியான வேறுபாடுகள் தீவிரமாக இருந்தன.

இந்து மகாசபையைச் சேர்ந்த சாவர்க்கர், கோல்வால்கர், தீன் தயால் உபாத்யாய போன்ற தலைவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தாக்கம் செலுத்தினார்களா?

இந்து மகாசபை இந்திய அரசியலமைப்புச்சட்டம் இந்துக்களுக்கான சுதந்திரத்தை தரவேண்டும் என்று கோரியது. பிற மத மக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே அந்த அமைப்பு கருதியது. மேற்கத்திய நாடுகளைப் பின்பிற்றி அனைவருக்குமானதாக சட்டங்கள் உருவாக்கப்படுவதை இந்து மகாசபை விரும்பவில்லை. முழுக்க இந்தியமயமாக, இந்து மக்களுக்காக அனுகூலமாகவே சட்டங்கள் இயற்றப்பட விரும்பியது.

நன்றி: டைம்ஸ் ஜன.29,2020




பிரபலமான இடுகைகள்