சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!



Shri Shridhar Venkat, CEO – The Akshaya Patra Foundation ...



சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம்.

தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து?

தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது. இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.

உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது?

நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் காலை உணவை வழங்க உள்ளோம். இந்த மெனுவில் உப்புமா, இட்லி, பொங்கல், சாம்பார் ஆகியவை உள்ளன. திருவான்மியூரில் உள்ள சமையற்கூடத்தில் சமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. மொத்த மாணவர்களுக்கான உணவுப்பொருட்களை சமைக்கும் திறன் கொண்டது எங்கள் மத்திய சமையற்கூடம்.

இதில் நீங்கள் பெற்றுள்ள வெற்றிகளைச் சொல்லுங்கள்.

சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பள்ளிக்குழந்தைகளுக்கான உணவுத்திட்டம் முக்கியமானது. நாட்டிலுள்ள 91 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் சிறப்பான பயன்களை அளித்துள்ளது. இது குழந்தைகள் பள்ளிக்கு வருவது உறுதிப்படுத்தும். இம்மாற்றம், குழந்தைகளின் வழியாக குடும்பம் என பரவி நாட்டை வலுவாக்கும்.

இப்போது நீங்கள் காலை உணவை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளிலும் வழங்கினால் எவ்வளவு நிதி தேவைப்படும்?

ஒரு குழந்தைக்கு 3 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது அக்குழந்தைக்கான ஓராண்டு உணவுச்செலவு.

நன்றி - டைம்ஸ், ஜன.30, 2020
ஆங்கிலத்தில் - விஷ்ணு ஸ்வரூப்