கல்வித்திறனுக்கு மரபணுக்கள் உதவுமா?
pixabay |
மரபணுக்களை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் திறன்களை மதிப்பிட முடியாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற மரபணு மற்றும் கல்வி தொடர்பான ஆய்வு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்களுக்கும், அதனை அடிப்படையாக கொண்ட கல்வித்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுகள் பெற்றோர்களுக்கு கணிசமான செலவை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவர்களின் கல்வி சார்ந்த முன்னேற்றத்திற்கு உதவுகிறது பள்ளி நிர்வாகம் அவர்களை பேசி ஒப்புக்கொள்ளச் செய்கிறது. இத்தகவல்களை கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த உறுதித்தன்மையும் கிடையாது. “மரபணுரீதியான தேர்வுகளில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் பதினாறு வயதிலேயே சிறந்த மாணவர்களாக சாதித்து காட்டியவர்கள் உண்டு ” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டிம் மோரிஸ்.
மரபணுக்களில் கல்விக்கான எந்த மரபணு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. ஆனால் இத்தகவல்களை கொண்டு கல்வி மட்டுமல்ல, மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வரும் நோய்களையும் கூட அடையாளம் காணலாம் என நேர்மறையாகவும் ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்றனர். நன்றாக படிக்கும் மாணவர்களை விட நன்றாக படிக்கமுடியாமல் தடுமாறும் மாணவர்களுக்கு இச்சோதனைகள் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கல்விரீதியான முன்னேற்றத்திற்கு மரபணு சோதனைகளை ஏற்கனவே மாணவர்களை பயன்படுத்தி சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். எனவே, மாற்றங்கள் நடக்கும் என்பது நிஜமே.
தகவல்: NS