திருமணம் ஏற்படுத்திய அதிர்ச்சி! - அன்புள்ள அப்பாவுக்கு...
pixabay |
10
அன்புள்ள
அப்பாவுக்கு, வணக்கம்.
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை
விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது.
செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது.
திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள்.
அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும்
கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான
செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
உங்களுக்கு சகோதரரிடம் நிறைய
பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க
முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே
உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது
பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட.
நன்றி!
ச.அன்பரசு
7.5.16