இயற்கையில் சிதையும் பிளாஸ்டிக்கு மதிப்பு கிடையாதா?






Brian Lehrer Plastic Challenge GIF by WNYC
giphy



உலக நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கி வருகின்றனர். காரணம் என்ன? வாங்க பார்ப்போம்.


பிளாஸ்டிக் என்பது என்ன? ஏராளமான கார்பன் மூலக்கூறுகள் இணைந்ததுதான். அதில் பாலிதீன், எத்திலீன் ஆகிய மூலக்கூறுகளின் இணைப்புதான் பிளாஸ்டிக் பொருட்களை உறுதியானதாகவும், வலுவாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. ஆனால் இந்த இணைப்பை பாக்டீரியா உண்ணும்படியான தன்மையில் மாற்றினால் என்னாகும்? அரிசியும் அதில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுக்கொன்று தொடர்பானது. அவற்றை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறும் அல்லவா? அதைத்தான் இங்கு கூறவருகிறோம். பாலிமர் எனும் பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் பெட்ரோல், டீசல் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான்.

பிளாஸ்டிக் பொருட்களின் வெற்றி அவை வெப்பம், ஈரப்பதம், வறட்சியான சூழ்நிலை ஆகியவற்றிலும் பொருட்களை கெடாமல் வைத்திருப்பதுதான். அதுவும் பிளாஸ்டிக் பிற பொருட்களை விட சல்லீசு ரேட்டில் கிடைக்கும். ஆனால் இப்போது பாக்டீரியா உண்ணும்படியான பொருட்களைக் கொண்டு  பிளாஸ்டிக்கை தயாரித்தால், அதனை 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மட்டும் தாங்கும்படியாகத்தான் வைத்திருக்க முடியும்.

உயிரியல் ரீதியாக சிதையும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால் அதில் கார்பன் டை ஆக்சைடு அதிகம் வெளியாகும். இது சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். காகிதத்தை மறுசுழற்சி செய்வது பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதை விட அதிக செலவு பிடிக்க கூடியது. ஆற்றலும் அதிகம் தேவைப்படும். எனவே,நாம் பிளாஸ்டிக்கை முற்றிலும் நம் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க நினைக்கக் கூடாது. பிளாஸ்டிக் மூலம்தான் உணவு வீணாவது குறைக்கப்பட்டுள்ளது. நாம் அணியும் ஆடைகளில் 67 சதவீதம் பிளாஸ்டிக்தான். நான் அணியும் ஷூக்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக்தான் முக்கியப்பொருளாக உள்ளது.

பிளாஸ்டிக் கழிவாக மாறும்போது அதனை என்ன செய்வது என அரசு தீர்மானித்து அதற்கென குறிப்பிட்ட அளவை தீர்மானிப்பது முக்கியம். ஆனால் முற்றிலும் தடை என்பது மக்களுடைய வாழ்க்கையை சிக்கலில் தள்ளும். மேலும் சூழலையும் பாதிக்கும்.

நன்றி - பிபிசி


பிரபலமான இடுகைகள்