ஸ்மார்ட்போனைக் கண்காணிப்போம். - சூப்பர் ஆப்ஸ்



Image result for forest app




அன்லாக் கிளாக்

எத்தனை முறை போனை திறக்கிறீர்கள், கைரேகை, முகமறியும் வசதியை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள், பின்கோடை எத்துனை முறை அழுத்துகிறீர்கள் என அத்தனையும் பதிவு செய்து உங்கள் அடிமைத்தனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆப் இது.

அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்ளாது என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம். இதனை உங்கள் போன் ஸ்க்ரீன் வால்பேப்பர் போல வைத்துக்கொண்டு எத்தனை முறை போனை திறக்கிறீர்கள் என்று கூட சோதித்துக்கொள்ள முடியும். ஆப்பை திறக்கும் நேரம் மிச்சம்தானே? ஜியோமி பயனர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். நேரவிரயம்.


மார்ப்

உங்கள் போனில் ஸ்பாட்டிஃபை முதற்கொண்டு கருப்பு குரோம் ஜிலுஜிலு படங்கள் வரை பல ரகசியங்களை வைத்திருப்பீர்கள். இதற்கான ஆப்களை ஒழுங்குமுறைப்படுத்தினால்தானே நல்லது? அதற்குத்தான் இந்த மார்ப் ஆப் உதவுகிறது. மேலேயுள்ள ஆப்பும், மார்ப் ஆப்பும் கூட கூகுளின் தயாரிப்பே. வேலை, விளையாட்டு, இணைய ரேடியோ என தலைப்பிட்டு ஆப்களை தேர்வு செய்துகொள்ளலாம்.


ஸ்பேஸ்

இதுவும் அன்லாக் கிளாக் போன்ற வேலைகளைச் செய்கிறது. நீங்கள் போனில் செலவிடும் நேரத்தை வரையறை செய்துகொள்ள இந்த ஆப்பை நாடலாம். மேற்சொன்ன ஆப்களை விட அதிகமாகவே அம்சங்களைக் கொண்டிருக்கிறது.


ஃபாரஸ்ட்

இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்துவிட்டு எத்தனை மணிநேரங்கள் போனை நோண்டாமல் இருக்கிறீர்களோ அவ்வளவு தூரம் இந்த ஆப் மூலமாக மரங்கள் வளரும். காடுகளாக நீங்கள் போனையே தூக்கி எறியவேண்டுமா என்று கோபமாகாதீர்கள். முடிந்தளவு போன் அடிமைத்தனத்தை குறைக்கவே இம்முயற்சி. போனி தீம் உட்பட அனைத்தும் பச்சை பசேலென மாறுவது அழகு.


நன்றி - மின்ட்







பிரபலமான இடுகைகள்