கலாமந்திரை விலைக்கு வாங்குவாரா நரேஷ் - கேவு கேகா காமெடி!




Image result for kevvu keka telugu movie





கேவு கேகா  -2013

அலரி நரேஷ்

இயக்கம்  தேவி பிரசாத்

ஒளிப்பதிவு அடுசுமிலி விஜயகுமார்

இசை பீம்ஸ் சிசரில்லோ சின்னி சரண்

Image result for kevvu keka telugu movie



காதல்தான் பிரச்னைக்கு காரணம். புச்சி முதல் காட்சியில் தற்கொலைக்கு முயல்கிறார். காரணம், லஷ்மியைக் காதலித்ததுதான். லஷ்மியின் அப்பாவுக்கு மருமகன் பணக்காரனாக இருக்கவேண்டும் என்று ஆசை. இதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கூட அதை மருமகன் கட்டவேண்டும் என நினைக்கிறார். இந்த லட்சணத்தில் கலா மந்திரில் விற்பனையாளராக இருக்கும் புச்சி எப்படி இந்த சவாலை சமாளித்து லஷ்மியை மணம் செய்து அவரை அம்மா ஆக்குகிறார் என்பதே கதை.

ஐயையோ சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இது அலரி நரேஷ் படம் என்பதால் அதனை கூறவில்லை. ஜாலியாக சிரிப்பதற்கான படம். அதனால்தான் நரேஷ் இருக்கிறார். அவரின் மேஜிசியன் மாமா கிருஷண பகவான் இருக்கிறார்.

Image result for kevvu keka telugu movie


புச்சி என்னென்னவோ முயற்சி செய்தும் காசு கிடைக்கவில்லை. அப்போது அவரது மாமா சொல்லும் ஃபிளாஷ்பேக்கில் அவரது தந்தை ஏமாற்றப்பட்டு சொத்து இழந்தது தெரிய வருகிறது. அதனால் அந்த பணத்தை ஏமாற்றியவர்களை பழிவாங்க பாங்காக்  செல்கிறார்கள். அங்கு ஆசிஷ் வித்யார்த்தியை சந்தித்தார்களா, தன் அப்பா இழந்த பணத்தை மீட்டு புச்சி கலாமந்திரை வாங்கினாரா என்பதுதான் கதை.

பெரிதாக கதையை நினைக்காதீர்கள். பாடல்களை அடித்து விட்டு பார்த்தால் படம் ரசிக்க வைக்கும்படியாகவே இருக்கிறது. புச்சி- நரேஷின் உடல்மொழியும் வசனமும்தான் படத்தை  பார்க்க வைக்கிறது. லஷ்மியின் தந்தையான எம்.எஸ்.நாராயணாவின் உடல்மொழியும் நடிப்பும் அபாரம்.

லாஜிக்கைப் பார்க்காமல் படத்தை பார்த்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கலாம்.

கோமாளிமேடை டீம்







பிரபலமான இடுகைகள்