தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா? - மிஸ்டர் ரோனி


Image result for the festo smartbird

விமானங்களில் உள்ள இறக்கைகள் ஏன் பறவைகளை போல இயக்கப்படுவதில்லை?

பறவைகள் தம் திசையை தீர்மானித்துக்கொண்டு பறக்கவும், முன்னோக்கி வேகமாக செல்லவும் இறக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் விமானங்களுக்கு அத்தகையை தேவைகள் கிடையாது. காற்றை ஏதுவாக பயன்படுத்தவே அதன் இறக்கைகள் பயன்படுகின்றன. மேலும் விமான இறக்கைகளில் இயந்திர மோட்டார்கள் உண்டு.

புதிதாக தயாரிக்கப்படும் விமான வகைகளில் நீங்கள் கூறுவது போன்ற சோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றன. இவற்றை ரிமோட் மூலம் கூட இயக்கலாம். இவற்றை ஆர்னிதாப்டர் என்கிறார்கள்.

லிப்ட்கள் எப்போது உருவாக்கப்பட்டன?

1852 ஆம் ஆண்டு எல்விஸ் ஓடிஸ் என்பவரால், லிப்ட் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பே ரோமில் பிளாட்பாரங்களை ஏற்றி இறக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துவிட்டனர்.

Girl, Curled Up, Sleeping, Asleep, Comfortable, Child


தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா?

தூக்கம் குறைந்தால் மனச்சோர்வு, உடல்சோர்வு என அனைத்தும் நேரும். கற்பனைக்காட்சிகள் கண்களில் தோன்றும். இப்படி தூக்க குறைவு நேர்ந்தவர்கள் மேற்சொன்ன அறிகுறிகளை ஆய்வாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். மெல்ல இவை உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவை ஏற்படுத்தும். இவை ஒருவரின் இறப்புக்கு காரணமாக மாறும்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

பிரபலமான இடுகைகள்