இடுகைகள்

ஏன்?எதற்கு?எப்படி? ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனை காணாமல் போகிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் மூக்கிற்கு வரும் வாசனை என்னாகிறது? நாம் சாக்லெட் பர்ப்யூம் அணிந்த அழகியைச் சந்திக்கிறோம். அவர் நம்மிடம் பேசிவிட்டு சென்றவுடன் சில நிமிடங்களில் அந்த வாசனை அழிந்துவிடுகிறது. நினைவில் மட்டும் அந்த வாசனை நீடித்திருக்கும். அதற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். மூக்கின் நுகர்வு எல்லைக்கு, அந்த வாசனை தட்டுப்படாத தற்கு, வாசனை மூலக்கூறுகள் காற்றிலிருந்து அழிந்துபோனதே காரணம். அழுகிய முட்டை, சல்பைடு தன்மை கொண்டது என்பதால் காற்றுடன் வினைபுரிந்து தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அனைத்து வாசனைகளும், அதன் மூலக்கூறுகளும் இப்படியானவை அல்ல. நன்றி- சயின்ஸ் ஃபோகஸ்  

காரில் போகும்போது பாடல் கேட்டால் தவறா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி - மிஸ்டர் ரோனி காரில் போகும்போது ரேடியோ கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது குறைபாடா? எனக்கு அப்படிச் செய்வதுதான் பிடித்திருக்கிறது. பிடித்திருந்தால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இப்போதுதான் இந்தியாவில் வாகன அபராதங்களை விண்ணளவு ஏற்றியிருக்கிறார்கள் என்பதால் கவனம். காரை விற்று தங்களின் கலாதிருப்திக்கு கப்பம் விற்கும்படி ஆகிவிடும். எனவே, ரேடியோவை சத்தமாக வைத்துக்கேளுங்கள் அதுவே உங்களுக்கும், பர்சிற்கும் நல்லது. போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது என்பதில் கூட தவறுகள் நேர அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை ஓட்டும்போது கவனமாக அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உண்மையில் பாடல் கேட்பதை மனம் தூண்டினால் நீங்கள் அதைச் செய்யலாம். குரோனிங்கன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் கடும் போக்குவரத்து நெரிசலில் போரடித்து பாட்டு கேட்பது கூட வண்டி ஓட்டும் கவனத்தைக் குலைக்கும் என்கிறது. தகவல் - பிபிசி

குளிரில் சளி பரவுவது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குளிர்பிரதேசத்திலும் சளி பிடிக்குமா? நிச்சயமாக. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இது நடக்கும். சளி பிடித்து மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு நடப்பீர்கள். ரினோவைரஸ் இதற்கு காரணம். இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கால்களில் ஐஸ்கட்டிகளும், சிலருக்கு நீரும் வைக்கப்பட்டது. குளிர்ந்துபோன ஐஸ்கட்டியைக் காலில் வைத்திருந்தவர்களுக்கு சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் 30 சதவீதம் காணப்பட்டது. பிறருக்கு இதைவிட குறைவான வாய்ப்புகள் காணப்பட்டன. குளிர்ந்த சூழல், உடலில் வெள்ளை அணுக்கள் செயல்படும் வேகத்தை குறைப்பது உண்மை. இதன் விளைவாக, குளிர்ந்த சூழலில் நோய்க்கிருமிகள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. பிறருக்கும் பரவுகிறது. குளிர்ந்த சூழலில், உடலை சூடாக வைப்பதற்கே உடலின் சக்தி செலவாகிறது. எனவே, உடலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது. நன்றி: பிபிசி

மேக்வாவிலுள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலை மேக்மாவில் நமக்கு கனிமங்கள் கிடைக்குமா? உண்மையாகச் சொன்னால் கிடைக்காது. ஏன் என்றால், மேக்மா பாறைகளை உருக்கியபடி வரும் ஒரு நீர்மம். அதில் கனிமங்கள் உள்ளது உண்மை என்றாலும் அதனை அடர்த்தியான தன்மையில் மாற்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக்மாவை குளிரவைத்து கனிமங்களை திட நிலையில் பெறலாம். மேக்மாவை நீரில் கரைத்து அதிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க முயற்சிக்கலாம். நன்றி: பிபிசி

நிலவு இல்லாத பூமி?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிலவு இல்லையென்றால் என்னாகும்? நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. ஒருவேளை நிலவு இல்லாதபோது, பூமியில் என்ன மாற்றம் நடக்கும்? கடல் அலைகளின் எழுச்சி குறையும். சூரியனின் ஈர்ப்பு விசை மட்டுமே பூமியைப் பாதிக்கும். தினசரி நேரத்தில் 0.002 நொடி வித்தியாசம் ஏற்படும். இப்போது பூமி 23.5 டிகிரி கோணத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசை இதனை இந்த இடத்தில் பொருத்தியுள்ளது. ஆனால் நிலவு இல்லாதபோது, இந்நிலை மாறும். செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் அதன் வட்டப்பாதையில் சாய்ந்துள்ளது ஈர்ப்புவிசை வலிமையற்ற துணைக்கோள்களால்தான். நன்றி: பிபிசி

நமக்கு இறக்கை முளைத்தால் என்னாகும்?

படம்
bbc முன்பு அதிக எடை கொண்ட பறவையாக இருந்தது, அர்ஜென்டாவிஸ் மேக்னிஃபைசென்ஸ். இது வாழ்ந்த காலம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. இதன் உயரம் எடை ஆகியவை அப்படியே இன்றைய மனிதனுக்குப் பொருந்தும். இதன் இறக்கை நீளம் ஆறு மீட்டர். இதன் இறக்கையை அடிக்கடி அசைப்பது சிரமம் என்பதால், சில அசைவுகளுக்கு பிறகு ஓய்வெடுத்து பின் இறக்கைகளை அசைக்கின்றன. நமக்கு இறக்கை முளைத்திருந்தால், நாம் இதுபோல முயற்சிக்கலாம்.  இறக்கைகள் நமக்கு இருக்கவேண்டுமெனில், பெக்டோரல் தசைகள் விலாவில் இருக்கவேண்டும். அதுவும் பாடிபில்டர்களுக்கு விலாவிலிருந்து விரிகிறதல்லவா? அதே தசைதான். ஆனால் இருமடங்கு சைசில் இருக்கவேண்டும். மேலும் இதனை வலுவாகப் பயன்படுத்த இந்த தசைகளோடு நெஞ்செலும்பும் வலுவாக இருக்க வேண்டும்.  உடலுக்குள் புகும் ஆக்சிஜனை மிக எளிதாக இறக்கைகளுக்கு செலுத்தி அதனை சக்தியாக மாற்றுபவை பறவைகள். மனிதர்களும் அதேயளவு திறனைப் பெற ஆக்சிஜன் சிலிண்டர்களை உதவிக்கு முதுகில் பொருத்திக்கொள்ளலாம்.  நன்றி: பிபிசி

டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது? டாய்லெட் பேப்பர் என்பது எளிதில் கிழிக்க முடிவதற்குக் காரணம், அது செல்லுலோஸ் இழைகளால் தயாரிக்கப்படுவதே. மேலும் டாய்லெட் நீரிலேயே அதனைப் போட்டாலும் எளிதில் கரைந்து கூழ் போலாகும் தன்மை அதற்கு பிளஸ். சிங்கில் உள்ள வடிகட்டி போன்றவற்றில் சிக்கிக் கொள்வதை சுகாதாரப் பணியாளர்கள் சேகரிக்கின்றனர். அதனை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். டாய்லெட்டரின் பேப்பரின் வாழ்வு அதோடு முடிவுக்கு வருகிறது. நன்றி: பிபிசி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி டியோட்ரண்ட்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக டியோட்ரண்ட் விற்கப்படுகிறது? இதில் என்ன வித்தியாசம் உள்ளது? பொதுவாக டியோட்ரண்டுகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் வேதிப்பொருட்களும் கூட மாறாது. மாறுவது அதன் வாசனைகள் மட்டுமே.  டியோட்ரண்டுகளை எதற்கு பயன்படுத்துகிறோம்? பெண்களைக் கவர என காமெடி பண்ணாதீர்கள். அக்குள் பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்களின் ரகளையை காலிசெய்யத்தான். இதற்காக அலுமினியம் மற்றும் ஸிர்கோனியம் அடிப்படையிலான வேதிப்பொருட்களை சேர்க்கிறோம்.  இந்த வேதிப்பொருட்கள் உடலின் வியர்வை சுரப்பிகளின் பணியை மட்டுப்படுத்துகிறது. பாக்டீரியா ஆண்களுக்கு 3 ஹைட்ராக்ஸி 3 மெத்தில் ஹெக்சானிக் அமிலம், பெண்களுக்கு சல்பர் ரிச் 3 மெத்தில் 3 சல்ஃபானிஹெக்ஸன் 1 ஆல் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் பிபிசி

ஓடினால் மழை குறைவாக நனைக்குமா?

படம்
Erika Lidberg \pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி மழை பெய்கிறது. அப்போது நடந்து சென்றால் அதிகம் நனையுமா? அல்லது ஓடினால் அதிகம் நனையுமா? முட்டை, கோழி கேள்வி அல்ல. அறிவியல்பூர்வமான விளக்கம் உள்ளது. ஹார்வர்டு கணித வல்லுநரான டேவிட் பெல், இதற்கான விளக்கம் தேடி அலைந்த  ஆண்டு 1976.  தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். நூறு மீட்டர் தொலைவில் நீங்கள் அடைய வேண்டிய இடம். சட்டென மழை பிடித்துக்கொண்டு அடித்துப் பெய்கிறது. செங்குத்தான் மழைத்துளிகளில் ஓடுகிறீர்கள். முகத்தில் அறைகிறது மழை. இப்போது நீங்கள் குறைவாகவே நனைவீர்கள் என்கிறது டேவிட்டின் ஆய்வு.    The Mathematical Gazette இதழில் வெளியானது இவரின் விரிவான ஆய்வு. மழை பெய்யும்போது நடந்து போவது, ஓடுவது என்பதில் பெரியளவு வித்தியாசம் இல்லை. ஏன் என்றால் கீழே தேங்கும் தண்ணீரால் பாதி, பெய்யும் மழையால் பாதி என நனைவீர்கள்.  உசேன் போல்டு கணக்காக ஓடினால் மழைநீர் உங்களை குறைவாகவே நனைக்கும். இதன் அளவு 10 சதவீதம்.  நன்றி: பிபிசி

ஏர் பிளேன் மோடு சரியானதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?   மிஸ்டர் ரோனி விமானங்களில் செல்லும்போது செல்போன்களை ஏர்பிளேன் மோடில் மாற்றச்சொல்லுவது ஏன்? செல்போன்களை மட்டுமல்ல; லேப்டாப், இபுக் ரீடர்(கிண்டில்) என அனைத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க விமானங்களில் கூறுவார்கள்.  காரணம், அவை விமானத்தின் தகவல் தொடர்ப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால்தான். இதனால்தான் விமானம் புறப்படத்தொடங்கும் டேக் ஆஃப் சமயத்தில் போன்களை ஏர்பிளேன் மோடில் வைக்கச்சொல்லுகின்றனர். அப்போது கதிர்வீச்சு பிரச்னை இருக்காது.  இன்று விதிகள் முன்பைப் போல கடினம் இல்லை. ஆனாலும் செல்போன்கள், ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் அவை விமான தகவல் தொடர்பை பாதிக்கின்றன என அவற்றை பயன்படுத்த மறுக்கின்றது விமான நிர்வாகம்.  நன்றி: பிபிசி