இடுகைகள்

மனமறிய ஆவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனமறிய ஆவல் - மின்நூலைத் தரவிறக்கும் முகவரி!

படம்
மனமறிய ஆவல் - கடிதங்களின் தொகுப்பை நீங்கள் கீழேயுள்ள மீடியாஃபயர் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கிப் படிக்கலாம். நன்றி. http://www.mediafire.com/file/xsnh69yhbmlq4ml/%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AF_%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2521.pdf/file

மனமறிய ஆவல் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
விரைவில் இரா. முருகானந்தம் அவர்களுக்கு அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் மின் நூலாக வெளிவரவிருக்கிறது. கடிதங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? அவை குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட உணர்வு நிலைகளை, பிரச்னைகளை பதிவு செய்கிறது. ஒருவகையில் காலத்தை காகிதங்களில் உறையவைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை அவர் செய்யும் வேலை, சூழ்ந்துள்ள மனிதர்கள், நகரம், அங்குள்ள சூழல், அரசின் உத்தரவுகள் என நிறைய விஷயங்கள் பாதிக்கின்றன. நிச்சயம் இதற்கான எதிர்வினைகள் நம் மனதில் தோன்றாமல் இல்லை. சிலர்  அதனை உடனுக்குடன் பகிர்ந்துவிடுவார்கள். இதுவும் அப்படியொரு பகிர்தல்தான். கடிதம் வழியாக நடந்த உரையாடல் எனக் கூட கூறலாம். தற்போது அட்டைப்படம் உங்களுக்காக....

ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!

படம்
ஆசிரியர் கே.என்.சிவராமன் முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார். அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். 11 27.11.2018 அன்புள்ள நண்பர் முருகு

கடைசிக்கட்டித் தங்கம் - வியக்க வைத்த தஞ்சை பிரகாஷ்

படம்
டிஜிட்டல் உலகில் பிரதிலிபி தமிழ் வலைத்தளம் உட்பட பல்வேறு தளங்களில் நீங்கள் உங்கள் எழுத்துகளைப் பதிப்பிக்க முடியும். இதுவரையில் நான் எழுதிய தொகுத்த நூல்களை பலரும் எளிதில் படிக்க முடியும். தனியாக நூல் எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டாலும், என்னால் அதிக நேரம் ஒரு நூலுக்காகச் செலவிடுவது கடினமாக உள்ளது. காகித வடிவில் நான் எழுதியதைப் பார்த்து மகிழ்வது முன்னர் கனவாக இருந்தது. விரைவில் அந்த போதையிலிருந்து வெளிவந்துவிட்டேன். சரியோ தவறோ தெரியவில்லை. அதுபற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. முறைப்படி குறிப்பிட்ட இதழுக்காக எழுதும் எழுத்துகளை நான் வெளியில் இணையத்தில் பிரசுரிக்க ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும். அதைப்பெற்று இணையத்தில் பதிவேற்றிவிட்டு தினகரனிலிருந்து வெளியேறினேன். கூடவே அந்த இதழில் எழுதிய பேராச்சி கண்ணன், சக்திவேல் ஆகியோரின் எழுத்துகளையும் இணையத்தில் பதிவு செய்துவிட்டேன். காரணம் இந்த எழுத்துகளை நானே தொகுத்ததுதான் காரணம். 8 17.11.2018 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். முத்தாரம் இதழில் வெளியான பசுமை பேச்சாளர்கள் தொடரை மின்நூலாக மாற்றி வெளியிட முயற்சித்து வருகிறேன். சூரி

ஆபீஸ் அரசியலை சமாளித்தால் உனக்கு வேலை! - இதழியல் பணி!

படம்
நீ எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யுடா தம்பி. ஆனா அங்கிருக்கிற அரசியலைச் சமாளிக்கத் தெரிஞ்சாத்தான் அங்க வேலை பார்க்க முடியும். பாத்துக்க என்றார் வடிவமைப்பாளரும் நண்பருமான மெய்யருள். விரைவிலேயே அலுவலகத்தில் அப்படியான சூழ்நிலை உருவானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நான் வேலை செய்த இதழ் முழுக்க நானே தயாரிப்பதுதான். இதில் மற்றவர்களுடன் கலந்து செய்யும் பிரச்னை ஏதுமில்லை. தி.முருகன் குழும ஆசிரியராக இருக்கும்போது, அவரும் முத்தாரத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். நான் பொதுவான செய்திகளை இணையம், நாளிதழில் பார்த்து தேடி எழுதுவேன். அவர் தேவையானால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்வது வழக்கம். குங்குமத்திற்கென நான் வேலைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, அதில் கடிதங்களை மட்டும் எழுதிக் கொடுத்து வந்தேன். ஆனால் அங்கிருந்த குங்குமம் இதழில் சீனியர், ஜூனியர் மோதல்கள் சகஜமானது. பெரும்பாலான ஆட்கள் விகடனிலிருந்து வந்தவர்கள். ஈகோ மோதல்கள் இருக்காதா என்ன? முத்தாரம், சூரியன் பதிப்பகம், பொங்கல் மலர், கல்வி வேலை வழிகாட்டி, கல்விமலர்  என வேலைகள் டைம்டேபிள் போட்டது போல இருக்கும். இந்த லட்சணத்தில்

பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி

படம்
மனமறிய ஆவல் - கடிதங்கள் பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை. சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார். சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள

மனமறிய ஆவல்! - கடிதங்கள்- துயரம் துரத்துதே ஏன்?

படம்
pixabay முன்னமே கூறினேனே திடீரென எழுதும்போது உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு வெறுமனே காலியாக உட்கார்ந்திருப்பது என் வழக்கமென. வின்சென்ட் கூட திட்டுவான். இப்படி சட்டென உணர்ச்சி வசப்படுவது சரியல்லவென. என்ன செய்வது என் இயல்பு அப்படி ஆகிவிட்டது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல திடீரென காலங்களில் பின்னால் கடிகாரத்தை திருப்பி வைத்துச் சென்றபோது கடும் விரக்தி ஏற்பட்டது. அந்தநேரத்தில் அஞ்சல் அட்டை கையில் கிடைத்தது துரதிர்ஷ்டம். உடனே எழுதி அப்போதே முருகானந்தம் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். இன்று படித்தால் உண்மையில் ஏன் இப்படி எழுதினேன். என்ன பிரச்னை என எனக்கே புரியவில்லை.இப்படி நெருங்கிய நண்பர்களுக்கு எழுதி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நட்பில் அதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  சரி, எழுதியதை மறைக்க முடியாது. படியுங்கள். 3 1.3.2013 அன்பு சகோதரருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நான் என்றும் உடன்பிறவாத சகோதரராகவே பாவிக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். தங்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் கி.மீ. தூரத்திலுள்ள என்ன