இடுகைகள்

நடிகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்

படம்
  நஸ்ரூதின் ஷா இந்தி திரைப்பட நடிகர் தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.  நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம்  அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்? நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.  ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது மு

திரைப்படமோ, வெப் தொடரோ மக்களின் மனதோடு இணையவேண்டும்! - இர்பான் அக்தர்

படம்
  இர்பான் அக்தர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் தொடர்கள் வெற்றி பெறும் அளவுக்கு திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லையே ஏன்? திரைப்படமோ, வெப் தொடரோ எதுவாக இருந்தாலும் அது மக்களின் மனதோடு இணைய வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி இணையாதபோது திரைப்படமும், தொடரும் வெற்றி பெறுவது கடினம். நாம் வாழும் காலத்தில் நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக பதிவு செய்வது முக்கியம். அப்போதுதான் அது மக்களை கவரும்.  ராக்கி, க்ரீட், மேரி கோம் என படங்கள் குத்துச்சண்டைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெற்றி பெறுகின்றன. இப்படி படங்கள் உருவாக்கப்பட என்ன காரணம்? இதுபோன்ற படங்கள் வெற்றியாளராக உள்ள குத்துச்சண்டை வீரன் தோல்வியுறுவது, தோல்வியுற்றவன் வெற்றி பெறுவது என  கதை அமைக்கப்படும். இது படங்களை பார்ப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். குத்துச்சண்டை வீர ர்கள் பலருமே சாதாரண பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். தங்கள் உடலை தங்கள் வாழ்க்கைக்காக எப்படி வருத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.  பெருந்தொற்று காலத்தில் சினிமாதுறை எப்படி இயங்கியது? பதினெட்டு மாதங்களில்  சினிமாதுறை நிற

நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020

படம்
                    ஏகே விஸ் ஏகே விக்ரமாதித்ய மோட்வானே இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது . படம் முழுக்க அனுராக் காஷ்யப் , அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல் , நக்கல் விரவிக் கிடக்கிறது . அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது . அனில் கபூர் , அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள் . அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது . அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார் . அனில் கபூர் , மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார் . அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார் . நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார் . இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார் . அவர் நடிக்க மாட்ட

நடிப்பை விட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிகம் பேசப்பட்ட ஆங்கிலப்பட நடிகர்! லியனார்டோ டிகாப்ரியோ

படம்
      டிகாப்ரியோ டிகாப்ரியோ டக்ளஸ் விட் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லியனார்டோ டி காப்ரியோவின் வாழ்க்கைக் கதை. ஜெர்மனை மூதாதையர்களாக கொண்டவர் லியோ. அவரின் ஹிப்பி அப்பா, உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அம்மா என இருவருடனும் வந்து அமெரிக்காவில் லியோ எப்படி ஜெயித்தார் என்பதுதான்  நூலின் முக்கியமான பகுதி. பால்ய வயதில் லியோ பல்வேறு டிவி தொடர்களில் நடித்து சம்பாதித்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்துதான் கொஞ்சம் நல்ல சூழல் கொண்ட வீட்டுக்கு மாறுகிறார். அவரின் இயல்பு, பள்ளியில் நடந்துகொள்ளும் விதம், டிவி ஆடிஷன்கள் , அவரின் அப்பா பற்றிய லியோவின் உணர்வுகள் என  நிறைய விஷயங்களை பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானா லியோ பேசிய பதிவுகள் அனைத்தும் ஊடகங்கள் வந்தவைதான் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அத்தியாயங்கள்.. குடும்பத்திற்கான வருமானமே லியோவின் நடிப்பு மூலம் கிடைக்கிறது. 1995க்குப் பிறகு லியோவின் வாழ்க்கை முறையே மாறுகிறது. டைட்டானிக் படம் வந்தபிறகு அவரின் சினிமா மார்க்கெட்டும் உயருகிறது. இந்த நூல் லியோவின் நடிப்பை மதிப்பிடுவதை விட ஆஸ்கர் விருதுக்கான் ஆசையை அதிகம் பேசியுள்ளத