நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020
ஏகே விஸ் ஏகே
விக்ரமாதித்ய மோட்வானே
இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க அனுராக் காஷ்யப், அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல், நக்கல் விரவிக் கிடக்கிறது. அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது.
அனில் கபூர், அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள். அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அனில் கபூர், மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார். அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார்.
நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார். இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். அவர் நடிக்க மாட்டேன் என்கிறார். இதனால் அவரது மகள் சோனமை கடத்தி வைத்திக்கொண்டு அவரைக் கண்டுபிடிக்க நீங்கள் இதற்கு சம்மதித்தே ஆகவேண்டும் என மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த சம்பவங்கள அனைத்தும் வீடியோகேமராவில் லைவாக பதிவு செய்யப்படுகிறது.
அனுராக் காஷ்யப் சொன்னது உண்மையா? சோனமை எப்படி அனில் கபூர் மீட்கிறார் என்பதுதான் கதை.
ஒருவரை பழிவாங்க ஒருவர் எந்த எல்லைக்கு போகிறார் என்பதை காட்டியிருக்கிறார்கள். அனில் கபூர், டாக்சி டிரைவரைத் தேடும் காட்சிகள் வெகுநீளம். யோகிதாதான் கதையை மாற்றியிருக்கிறாள் என்பதை அனுராக் எளிதாக யூகித்துவிடுகிறார். அப்புறம் என்ன? அதில் உள்ள சுவாரசியம் அதனை யார் செய்யச்சொன்னது என்பதுதான் அதனை இறுதியில் மாஸ் கிளப்பி பாடலோடு சொல்லுகிறார்கள். இந்த பாடல் படத்திற்கு அவசியமா என்று புரியவில்லை.
கதை, சொன்னவிதம் என்ற வகையில் கவனம் ஈர்க்கும் படம்தான். போரட் போன்ற படங்களை எடுக்கும் விதமாகவே இதனை எடுத்திருக்கிறார்கள். இதனால் படத்தில் நேர்த்தியான கோணங்களை எதிர்பார்க்க முடியாது. படத்தின் இயல்பு கெடாதபடி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பரிசோதனை முயற்சிதான்.
கேலி, கிண்டல் வசனங்களும் அனுராக் காஷ்யப், அனில் கபூர் ஆகியோரின் நடிப்பும்தான் படத்தின் பலம்.
செம போட்டி!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக