ஆடை வடிவமைப்பு, மலையேற்றம், சினிமா, தொழில் சாதிக்கும் பெண்கள்! - கிருஷ்ணா பாட்டில், அங்கிதா, ஸ்வேதா, ஹர்சிதா
கிருஷ்ணா பாட்டீல்
இமாலயத்தில் உள்ள சாடோபந்த மலையில் ஏறிய இளம்வயது பெண் இவர்தான். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இமயமலைக்கு சென்ற முதல் பெண் கிருஷ்ணாதான். 2007ஆம் ஆண்டு மலையேற்றம் பற்றி உத்தர்காசியிலுள்ள நேரு இன்ஸ்டிடியூட்டில் படித்தார். பிறகு அதிலேயே அட்வான்ஸ் கோர்சும் முடித்தார். பதினெட்டு வயதில் படிப்பின் ஒரு பகுதியாக மலையேற்றத்தைத் தொடங்கிவிட்டார்.
மூன்று வயதிலிருந்து மலையேற்றம் செய்யவேண்டும் என்று நினைத்து வந்தவர் கிருஷ்ணா. ஏழு கண்டங்களிலுள்ள ஏழு மலைத்தொடர்களில் ஏறிவிட்டார். அதற்குப் பிறகு 2010இல்தான் இமயமலையில் ஏறுவதற்கான முயற்சியைத் தொடங்கினார். மெக்கின்லி மலை ஏறும்போது தொழில்நுட்பரீதியான தடைகள் தோன்றின. ஒருவகையில் பெண்கள் சாதிப்பதற்கான பல்வேறு தடைகளை கிருஷ்ணா பாட்டீல் தனது சாதனைகள் மூலம் ஓரளவு தகர்த்துவிட்டார். இயற்கைச்சூழலோடு இணைந்து வாழ்வது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். ஆறு கண்டங்களிலுள்ள மலையேற்ற பெண்களில் இவரும் சுத்தமான நீர், காடுகள் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தையல் மற்றும் ஓவியங்களிலும் இப்போது தன் திறமையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
பெமினா
ஸ்வேதா ததூஸ்கர்
தி டிசைன் ஸ்டோரி, இயக்குநர், நிறுவனர்
ஸ்வேதாவின் வடிவமைப்புகளும் அதனை பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கும் நூலும் அவரது படைப்புகளை தனித்துவமாக்குகின்றன. இவரது அம்மா சீமாதான் ஸ்வேதாவின் கிரியேட்டிவிட்டிக்கு உந்துசக்தி. கடந்த ஆண்டு சிறந்த டிசைனர் விருது கூட வென்றுள்ளார். பதினைந்து ஆண்டுகளாக உழைத்துவரும் இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இசை ஆல்பம் ஒன்றுக்கு அண்மையில் பணியாற்றினார். என்டர்ப்ரீனர் ஐகான் 2020 புனே எனும் விருதை வென்றுள்ளார்.
புதிய விஷயங்களைக் கற்று்க்கொண்டு நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது என்பது ஸ்வேதான் முக்கியமான செயல்பாடு. நீங்கள் உங்களுக்கு என்ன கிடைக்கவில்லை என்பதை விட என்ன கிடைத்துள்ளது என்பதை கவனம் செலுத்தி பார்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு வடிவமைப்பு பற்றிக் கற்றுக்கொடுத்துள்ளார்.
அங்கிதா ஜே.பி. ஷெராப்
ஷெரப் குழுமத்தில் கூடுதல் தலைவர், சாவ் கெமிக்கல் நிறுவனர், ஸ்பலா, சஸ்டைன் அண்ட் சேவ் நிறுவனர்.
நான் எனது இலக்கு நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். அதனை முடிக்காமல் வேறு வேலைகளில் கவனம் செலுத்த மாட்டேன் என்று கூறிவரும் அங்கிதா, லாக்டவுனில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்து என்னென்ன செய்யவேடும் என்பது அவரது குழுவினரிடையே விவரித்து பேசியிருக்கிறார். அங்கிதாவுக்கு உள்நாடு தவிர வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உண்டு. ஸ்வீடன் அரசு இவரை அழைத்து சூழலுக்கு உகந்த வணிகம் பற்றி பேச பணித்திருக்கிறது.
இவரது நிறுவனங்களின் பெண்களின் நியமனம் 50 சதவீதமாக உள்ளது. கனவு என்பது லட்சியமானால்தான் அதனை சாதிக்க உழைத்து சாதனையாக மாற்றமுடியும் என்பது அங்கிதாவின் உறுதியான நம்பிக்கை. ஒரே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர் மற்றவர்களுக்கு ஒரு நேரத்தில் ஒருவேலை மட்டும் செய்யுங்கள் என வலியுறுத்துகிறார். என்ன கொள்கையோ?
பெமினா
ஹர்சிதா ஶ்ரீவஸ்தவா
பிரியான்சி திரைப்பட நிறுவன இயக்குநர்
ஹால்ப்பென் ஹேண்ட் என்ற பவுண்டேஷனைத் தொடங்கி பெருந்தொற்று காலத்தில் தேவைப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கியுள்ளார். இவரும் கணவரும் வேலை பார்த்துவந்த நிறுவனத்தில் இருந்து பணி விலகி சினிமா கம்பெனியை உருவாக்கினார். தன் சொந்த. பேனரில் தனக்கு பிடித்த படத்தை எடுக்கும் துணிச்சல் ஹர்சிதாவுக்கு இருந்தது. அதுபோலவே படத்தையும் தைரியமாக எடுத்துவிட்டார். வாழ்க்கையில் சந்தித்து பல்வேறு சிக்கலான சூழல்கள்தான் தன்னை மாற்றின, மனித இயல்பை புரியவைத்தன என்கிறார் ஹர்சிதா.
கருத்துகள்
கருத்துரையிடுக