சோலோவாக வாழ்பவனின் வாழ்வை மடக்கி சுருட்டும் காதல் சுனாமி! -
சோலோ பிரதிக்கே சோ பெட்டர்
Director:
SubbuWriter:
SubbuStars:
Ajay, Vennela Kishore, Kalyani N
இருபது வயதில் கொடி ஏந்தி போராடும் மாணவர்கள் சாய் தரம் தேஜின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்கின்றனர். அதனை வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சாய் தனது கதையை நமக்கு சொல்லுகிறார்.
காதலும், கல்யாணமும் நமது சுதந்திரத்தை நம்மிடம் இருந்து பறித்துவிடும் என்று நினைக்கும் சாய் தரம் தேஜ், அதனை புத்தகமாக எழுதி கல்லூரியில் விற்பனை செய்து தனக்கு பின்னால் மாணவர்களை திரட்டுகிறார். இதற்கு காரணம் அவருக்கு அவருடைய வேணு மாமா சொல்லும் விஷயங்கள்தான் உந்துதலாக உள்ளன. திருமணம் செய்யாதவர்களை ஆதர்சமாக வைத்துள்ளவர் தன் பெற்றோரிடம் கூட ஒட்டுதலாக நடந்துகொள்வதில்லை. வேலை கிடைத்ததை கூட சொல்லாமல் ஹைதரபாத்திற்கு செல்கிறார். அங்கு சென்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் வேலையை ஏற்கிறார். அந்நகரில் அவர் நினைத்த கொள்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்கள் மெல்ல திருமண வாழ்க்கை செய்து செட்டிலாகின்றனர். மெல்ல வாழ்க்கை யதார்த்தம் புரிந்து சாய் வாழத் தொடங்கினாரா அல்லது பிடிவாதமாக இருந்து சால்ட் பெப்பர் லுக்கில் வாழ்ந்தாரா என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சி.
படத்தில் சாய் தரம் தேஜ்தான், விராட். அம்ருதாவாக நாபா நடேஷ் நடித்திருக்கிறார்கள். படத்தில் நெகிழ்ச்சியான பகுதிக்கு ராவ் ரமேஷ், ராஜேந்திர பிரசாத், நரேன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். படத்தில் ஆபாசமான காட்சிகள் ஏதுமில்லை. ஏன் குத்துப்பாட்டு கூட கிடையாது. நெகிழ்ச்சியான காட்சிகள் கூட வலிமையாக அமையவில்லை என்பதுதான் பெரிய பலவீனம்.சாய் தரம் தேஜ்தான் படத்தின் அனைத்து காட்சிகளையும் தூக்கிச்சுமக்கிறார்.
சுப்புவின் வசனங்களில் ராவ் ரமேஷ் பேசும் வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
மற்றபடி பாடல்களை தமன் எப்போதும் போல கேட்கும்படி செய்துவிட்டார்.
இரண்டுபேர் இருந்தால் பெட்டர்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக