மருத்துவம், பேஸ்கட்பால், வடிவமைப்பு என பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியப் பெண்கள்! -பெண்களின் இ்ந்தியா!

 

 

 Suit, Business, Sw, Women, Attractive, Profile

 

 

தலைமைத்துவ பெண்கள்


டாக்டர் கனன்பாலா யெலிகார்


கல்வியாளர், நிர்வாகி


யெலிகர் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக இருந்தவர். இதுவரை இத்துறையில் 800க்கும் மேற்பட்ட உரைகளை பெண்கள் தொடர்பாக பேசியுள்ளார். இதில் ரத்தசோகை, எய்ட்ஸ், குடும்பக்கட்டுப்பாடு, மார்பக புற்றுநோய் ஆகியவை உள்ளடங்கும்.


நேர்காணலுக்கு அணுகுபவர்களுக்கு கூட சற்றுப் பொறுங்கள் என்று சொல்லமுடியாதபடி தனது கீழுள்ள பணியாளர்களுக்கு ஆன்லைன் மருத்துவ செயல்பாடுகளை விளக்கம் அளித்து செய்துகொண்டிருக்கிறார். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரித்த சாதனைக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். மேலும் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டும் விழிப்புணர்வு தொடர்பாகவும் விருது பெற்றிருக்கிறார். மகாராஷ்டிரா முதல்வரின் பாராட்டுக்களைப் பெற்றதற்கு காரணம், பல்வேறு தடைகளை தாண்டி தனது கடன் பணி செய்வதே என தன்னை ஈடுபடுத்திக்கொண்டதுதான் என யெலிகர் நம்புகிறார்.


பெமினா


சாந்தாபாய் துல்சிராம் சகாரே


யூடியூப் பிரபலம்


சாந்தாபாய் தான் கற்ற விஷயங்களை பிறருக்கு கற்றுத்தந்து வருகிறார். பதினொரு வயதில் சமைக்க கற்றவர் இன்றுவரை பிறருக்காக சமையல் செய்தபடியே உள்ளார். இவரது குடும்பத்திற்காக சமைத்து பிரமாதப்படுத்தியவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இவரது பேரன்தான். யூடியூபில் பனாரஸ் பருத்திப்புடவையைக் கட்டியபடி நம்பிக்கையோடு சமைக்கும் வீடியோக்கள் இந்தியர்களை மட்டுமல்ல உலகினரையே கவர்ந்துவிட்டது.

குக்கிங் அஜி என தேடினால் இவரின் வீடியோக்கள் இணையத்தில் கிடைக்கும். எனக்கு இந்த வயதில் தான் கற்று்க்கொண்டதை பகிர்வதே மகிழ்ச்சி. இதில் கிடைக்கும் பணம் என்பது பெரிதல்ல என்கிறார் இந்த பாட்டி.


பாயல் பால்தோடா


டிசைன் வொர்க்ஸ் நிறுவன இயக்குநர்


அமெரிக்காவில் உள்ள லைப்ஸ்டைல் நிறுவனமான ஜேசி பென்னியில் வடிவமைப்பாளரான பணிக்குச் சேர்ந்து 2003இல் சிறந்த டிசைனர் என்ற விருதைப் பெற்றார். இவர் அங்கு ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் படிப்பில் பட்டம் பெற்றவர். பல்வேறு நிறுவனங்களுக்கு பணிபுரிந்துள்ளதோடு பல்வேறு பிற வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.


ஒருவரிடமிருந்து பெஸ்டான விஷயம் வேண்டுமென்றால் நீங்கள் அதனை ஊக்குவித்து பெறவேண்டும். அதுதான் உங்களது தலைமைத்துவத்திற்கு அழகு எனும் இவர் லாக்டவுனில் கூட தனது திட்டங்களை மாற்றிக்கொள்ளவில்லை. சமூகத்திற்கு நமது பங்களிப்பாக ஏதேனும் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்பதை புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறார்.



சந்திரகலா சனப்


ஷாசா வடிவமைப்பு தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர்


அழகுக்கலை மற்றும் பேஷன் துறையில் சந்திரகலாவின் பெயர் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அவர் இங்கு வேலை செய்கிறார். எந்த தொழில் அறிமுகமும் தெரியாமல் உள்ளே வந்து பிற நிறுவனங்கள் வேலைக்கு வருகிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். நாம் நம் வேரோடு எப்போதும் இணைப்பு கொண்டிருப்பதோடு இதயம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்கிறார்.


இவர் தொழில்துறைக்கு உள்ளே வரும்போது ஆலோசனை சொல்லுவதற்கு குறைந்த ஆட்களே இருந்தனர். எனவே ஷாசா எனும் நிறுவனம் தொடங்கி வடிவமைப்பு பற்றி மாணவர்களுக்கு கற்பித்து தொழில்தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். இப்போது டோரி என்ற பெயரில் துணிவகைகளை தொடங்க ஆலோசித்து வருகிறார்.



ஐஸ்வர்யா சீமா காலே


நடன கலைஞர்


டிவி நடன நிகழ்ச்சியில் நடனக்கலைஞராக பங்குபெற்று அதில் தோல்வியுற்று வெளியேறியது முக்கியமானது. ஆனால் பிறகு மாதுரி தீக்‌ஷித், ஆலியாபட் ஆகியோரோடு சேர்ந்து ஆடியிருக்கிறார். பதினைந்து ஆண்டுகளாக நடனம் ஆடி வருகிறார். கதக் பரதநாட்டியம் ஒடிசி, வெஸ்டர்ன், பெல்லி டான்ஸ், நாட்டுப்புற நடனம், பாரம்பரிய நடனம், லத்தீன் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளை தனித்துவமாக ஆடும் திறன் கைவரப்பெற்றவர். நான் எங்கு பயணித்தாலும் சரி நடனக்கலைஞராக இருப்பதே பெருமை என்கிறார் சீமா


பெமினா


ஷிரின் லிமாயா


தொழில்முறை பேஸ்கட்பால் விளையாட்டு வீரர்


இந்திய பெண்கள் பேஸ்கட் பால் டீமில் விளையாடி வருகிறார். தனது முதல் உலக பேஸ்கட்பால் போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசை வென்றார். 2012இல் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். மகாராஷ்டிரா சிவ் சத்ரபதி விருது வென்றவர், காமன்வெல்த் போட்டிகளுக்கு இந்திய டீமின் அணித்தலைவராக சென்று வந்த பெருமை கொண்டவர்.


தனது அணி வீர ர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு உதவ வேண்டும் என்பதை முக்கியமாக நினைக்கிறார் ஷிரின். அடுத்து பேஸ்கட்பாலில் தலா மூன்று வீரர்கள் மட்டும் விளையாடும் போட்டி நடைபெறவிருக்கிறது. பெண்கள் விளையாட்டின் மீதான ஆர்வத்திற்காக கடுமையாக உழைக்கவேண்டும். தங்களுக்கு பாதுகாப்பாக உள்ள இடத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஷிரின்.



பெமினா



டாக்டர் மேதா

தத்பாத்ரிகர்


தொழில்முனைவோர்


இவர் தன்னை பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான போராளியாக நினைக்கிறார். மந்த்ரா ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், பீனிக்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் , ருத்ரா என்விரோன்மென்டல் சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வரும் இயக்குநர் இவர். பெண்களின் மேம்பாட்டிற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறார். வெற்றிக்கு குறுக்கு வழி ஏதுமில்லை என்று பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டார். பிளாஸ்டிக் குப்பைகளை எரிபொருளாக மறுசுழற்சி செய்யும் பணியை செய்து வருகிறார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்