அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

 

 

 

 

 

 Analysis, Biochemistry, Biologist, Biology

 

 

தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார்.


முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை. தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது, வல்லுநர்களைக் கொண்டது, கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது, குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது, மேம்படுத்துவது, இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது.


பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு. முழுநேர ஆராய்ச்சியாளர்கள். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு, ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும். தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன. உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது.


இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் அணுகி அதனைப் படிக்கமுடியும். அரசு பணம் கொடுத்து ஆராய்ச்சிகளை ஊக்குவித்தாலும் கூட இதன் வெளிப்படைத்தன்மையை அரசு உறுதிப்படுத்துகிறது. வல்லுநர்கள் தங்கள் அறிவை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் என பலரும் அரசின் ஆராய்ச்சிகளை அணுகமுடியும்.


இத்திட்டம் மூலம் அனைவரும் பல்வேறு நாளிதழ்களை படிக்கும் வண்ணம் அவற்றுக்கு சந்தாதொகை கட்டப்படவிருக்கிறது. இதன்மூலம் வாசிக்கும் அனைவருக்கும் நூல்கள் கிடைக்கும். ஒரே நாடு ஒரே சந்தா எனும்படி நாளிதழ்கள் வார இதழ்கள், மாத இதழ்களுக்கு சந்தா கட்டப்படவிருக்கிறது. இதன்மூலம் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என சமூகம் உருவாகும். தற்போதைய முறையில் அறிவைப் பெறுவதற்கான வழிகள் கடினமாக உள்ளன.



இந்தியாவிலுள்ள நூறு கோடி மக்களுக்கும் செய்திகளை வழங்கும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் தேவை. இதற்கென அரசு ஆண்டுக்கு 1500 கோடி செலவு செய்தால் கூட 3.5 லட்சம் பேர்தான் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர் என்பது வேதனையான நிகழ்ச்சி. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகும் முக்கியமான நூல்கள், நாளிதழ்களை பெற்று படிப்பது கடினம். பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கிராமங்களில் வசித்தால் கூட இதனை நூலகங்களில் பெற்று படிக்கலாம். இந்த வசதி கிடைக்கும்போது மாணவர்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்.


ie



கருத்துகள்