வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு வழிவகுத்த பார்லர் சமூகவலைத்தள சேவை! - பின்னணியில் வலதுசாரி முதலீட்டாளர்
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை வலதுசாரி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக உலக நாடுகளில் அமெரிக்கா இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இத்தனைக்கும் அங்கு பாதுகாப்பு இருந்ததா என்று கேட்குமளவுக்கு போராட்டக்கார ர்களை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது. இதையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு டிரம்ப் பேசிய பேச்சுகள் முக்கிய காரணம். அதேபோல வலதுசாரி, கலக, துவேஷ கருத்துகளை பரப்பும் பார்லர் எனும் சமூக வலைத்தளம் தற்போ ஆப்பிள், கூகுள், அமேசான் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
பார்லர் எனும் சேவை டிவிட்டர் போன்ற மைக்ரோபிளாக்கிங் போன்றதுதான். இதிலும் உங்களுக்கு பிடித்தவரைப் பின்தொடரலாம். கருத்துகளை பகிரலாம். ஆனால் எந்த கருத்துகளையும் பார்லர் பயனருக்கு பரிந்துரைக்காது. எந்த பயனர் தொடர்பான தகவல்களையும் பகிரமாட்டோம் என்று பார்லர் கூறியுள்ளதால், இதன் பதிவுகளை வேறு எந்த சமூகவலைத்தளத்திலும் பகிர முடியாது. ஆனால் பிற சமூக வலைத்தள பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து பயனர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அமெரிக்காவில் 8 மில்லியன் மக்களும் உலகளவில் பத்து மில்லியன் மக்களும் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறது சென்சார் டவர் ஆய்வு அமைப்பு.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சேவை, டிரம்ப் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் டிரம்ப் வெளியேற்றப்பட்டதும் அவர் புதிய தளத்தில் செயல்படுவதாக கூறினார். அப்போது அதற்கான முழு தகுதியுடன் இருந்தது பார்லர்தான். தன்னை நடுநிலையான ஊடகம் என்று சொல்லிக்கொள்ளும் பார்லர் வெள்ளை மாளிகை தாக்குதல் இடதுசாரி ஆட்களால் நடைபெற்றது என்று கூறியுள்ளதோடு, அச்செய்தியை நீக்காமல் வைத்துள்ளது. நவம்பர் தேர்தலுக்குப் பிறகு பயனர்களின் எண்ணிக்கை பார்லர் தளத்தில் அதிகரித்து வந்தது. நெவடாவை தலைமையகமாக கொண்ட பார்லர் 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை ஜான் மட்ஸே, ஜேர்டு தாம்சன் ஆகியோர் இதனை தொடங்கினர். இந்த தளத்திற்கு நிதியுதவி செய்பவர் டிரம்பின் தேர்தல் பிரசாதத்திற்கு உறுதுணையாக நின்ற ரெபெக்கா மெர்சர். இவர் முதலீட்டாளர் ராபர்ட் மெர்சர் என்பவரின் மகள்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு ஜனவரி 8 அன்று, ஆப்பிள், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் பார்லர் ஆப்பை தங்கள் வலைத்தளங்களிலிருந்து நீக்கிவிட்டன. வன்முறையைத் தூண்டிவிட்டதாக இதற்கு காரணம் சொல்லியிருந்தன. பார்லர் நிறுவனம் இதனை ஏற்கவில்லை. அமேசானின் க்ளவுட் சேவை நிறுவனம், பார்லர் நிறுவனத்திற்கான சேவையை நிறுத்திக்கொண்டது. வன்முறையை ஊக்கப்படுத்தும்படியான பதிவுகளை பார்லர் தனது வலைத்தளத்தில் கொண்டிருந்தது என அமேஸான் பதில் கூறியது.
அமேசான் நிறுவனம் பார்லர் நிறுவனத்திற்கு வன்முறை பதிவுகள் பற்றி ஏராளமான கடிதங்களையும், எச்சரிக்கைகளையும் அனுப்பியும் பார்லர் தனது பதிவுகளை மாற்றிக்கொள்ளவில்லை. இது அமேசானின் விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பார்லர் அதற்கெல்லாம் அப்போது தலைசாய்க்கவே இல்லை. இப்போது அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடுக்க பார்லர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போது எபிக் என்ற பெயரில் வலதுசாரி கருத்துகளை பேசும் சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறது. இது சுதந்திரமான கருத்துகளை பேசும் இடம் என பார்லர் தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுருதி தபோலா
கருத்துகள்
கருத்துரையிடுக