300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

 

 

 

 

 

 

 



 

 

மனநலன் காத்த மருத்துவர்!


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ.எஃப். நிதின். இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார். நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர், கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார்.


கொரோனா பரவத்தொடங்கிய போது, இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது. இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும். இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார். பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன.


காரணம், நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன. நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன. இதனால் நோயுற்றவர்களாக கருதப்பட்டவர்களின் குடும்பம் பெரும் பீதியில் ஆழ்ந்தன. குடிமைப்பணி எழுத முயன்று பிறகு மருத்துவராக வேலை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவரானவர் நிதின். அதிக சம்பளம் கிடைக்கும் வேலை என்பதைப் பற்றி கோவிட் -19 சமயத்தில் இவர் நினைக்கவில்லை. மக்களின் மன அழுத்தத்தை தீர்த்து வைத்து அவர்கள் நிம்மதியாக தூங்க உதவினேன் என்ற மகிழ்ச்சியே மிகப்பெரியது என நினைத்து பொதுமுடக்க காலத்தில் பணியாற்றியுள்ளார்.


https://www.newindianexpress.com/good-news/2021/jan/23/meet-nithin-a-kerala-psychologist-making-covid-less-pain-demic-for-patients-2253764.html






கருத்துகள்