72 மணிநேரத்தில் கொலைக்குற்றவாளியைக் கூண்டிலேற்ற காலப்பயணம்! மிரேஜ் 2018

 

 

Mirage (2018) Hindi Dubbed Full Movie Watch Online HD Free ...

மிரேஜ் 2018

ஸ்பானிய திரைப்படம் 


SpanishDurante la tormenta
Directed byOriol Paulo
Produced byMercedes Gamero
Mikel Lejarza
Eneko Lizarraga
Jesus Ulled Nadal
Written byOriol Paulo
Lara Sendim
Starring
Music byFernando Velázquez
CinematographyXavi Giménez


1989 ஆம் ஆண்டு டிவியில் கிடாரை வாசித்த பதிவு செய்துகொண்டிருக்கிறான் சிறுவன் ஒருவன். அப்போது எதிர்வீட்டில் ஏதோ சண்டை போடுவது போல சத்தம் கேட்க, அங்கு சென்று பார்க்கிறான். மனைவி கத்தியால் குத்துபட்டு கிடக்க, மேலிருந்து கீழே வரும் கணவரின் கையில் கத்தி. பயந்துபோய் சிறுவன் ஒடுகிறான். அவனை துரத்தியபடி கொலைகார கணவர் வருகிறார். சாலையில் வேகமாக வரும் காரை எதிர்பார்க்காமல் சிறுவன் செல்ல, அவன் அடிபட்டு கீழே விழுந்து உயிரை விடுகிறான். 


2014இல் அதேசிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு வெரா ராய் என்ற பெண்மணி கணவனுடன் தங்குவதற்கு வருகிறாள். அங்கு நிகோ என்ற இறந்துபோன சிறுவனின் டிவி, வீடியோ கேமரா கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து வானில் புயல் ஒன்று ஏற்படுகிறது. இடி, மின்னல், காற்று என மாறுபட்ட சூழ்நிலையில் திடீரென அந்த டிவி ஆனாகிறது. அதில் இறந்துபோனதாக கூறப்பட்ட சிறுவன் தெரிகிறான். அவனின் உயிர் போனதை சாப்பிடும்போது பக்கத்துவீட்டுக்காரர்களோடு  பேசி அறிந்துகொள்வதால் அவனை காப்பாற்ற நினைக்கிறாள். சிறுவன் உயிர் பிழைத்தானா இல்லையா என்பதுதான் கதை. 

25 ஆண்டுகளில் நடைபெறும் புயல் காரணமாக ஏற்படும் காலப்பயணம். அதில் ஏற்படும் மாற்றங்களை புயல் கடக்கும் முன்பு சரிசெய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. வெரா ராய் வாழ்க்கை சிறுவனுக்கு உதவிய பிறகு மாற்றம் காண்கிறது. அவள் மருத்துவமனையில் உதவியாளராக இருந்து மருத்துவராகி இருக்கிறாள். அவளுடைய கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறான். அவளுடை மகள் குளோரியா கூட காணவில்லை. வெரா சொல்வதைக் கேட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவ முன்வருகிறார். ஆனால் அதற்கு ப்ரூப் கேட்கிறார். வெராவால் அதற்கான ப்ரூப்பை தர முடிந்ததா, இழந்த கணவன், குழந்தையை 72 மணிநேரத்தில் மீட்க முடிந்ததா என்பதுதான் படம். 

காலப்பயணம்தான் கதை. அதன் வழியாக இறந்துபோன பெண்ணுக்கு நீதி கிடைக்க வெரோவும் நிக்கோவும் போராடுகிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்பதுதான் இறுதிக்காட்சி. வெரா ராய், டேவிட், போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறுவனம் நிகோ என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

டிவி, வீடியோகேமராதான் காலப்பயணத்திற்கான ஊடகம். இதனை மையமாக்கி அம்மா, மகள் பாசத்தை கொலைக்குற்ற பின்னணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.திரில்லர் படங்களில் முக்கியமான படம் என இதனைச் சொல்லலாம். 

 

டிவி வழியாக நீதி!


கோமாளிமேடை டீம்










Mirage (2018) - Review | Spanish Netflix Sci-Fi Thriller ...
mirage 2018   





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்