ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

 

 

 

 

 

 

 


 

 

ஒலிப்பெருக்கி வழியே கல்வி!


ஷைலேஷ் ராவல்

ஆசிரியர், குஜராத்



இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது. இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர்.


குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம். இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா. இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும். இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி. ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது, ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார்.


வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன், டேப்லெட், மடிக்கணினி, ஏன் டிவி கூட கிடையாது. அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இன்று கொரோனா காலத்தில் மாணவர்கள் கற்பதற்கு அவசியமான பொருள் ஸ்மார்ட்போன் மட்டுமே என்ற சூழலில் மேற்சொன்ன உண்மை வேதனையானது. வறுமை நிலையிலுள்ளவர்களின் குடும்பத்தைச்சேர்ந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் பள்ளியிலிருந்து இடைநிற்றலாகி வேலைக்குச் செல்லு்ம நிலையில் உள்ளனர்.


பார்படா கிராமத்து தலைவர், அக்கிராமத்து மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கில் இருபது ஒலிப்பெருக்கிகளை ஏற்பாடு செய்து தந்திருக்கிறார். ஷைலேஷ் கிராமத்திலுள்ள மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களை ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி கற்க அழைத்திருக்கிறார். பலரிடமும் கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கிறார். இவர் இருபத்தேழு ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளார். துணை முதல்வராக வேலை செய்யும் பள்ளியில் இருநூறு மாணவர்கள் கல்வி கற்று வருகி்ன்றனர்.


கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஏழுபேர் ஒன்றாக கூடுகின்றனர். ஒருவர் பின் ஒருவராக மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பாடங்களை கற்பிக்கின்றனர். தினசரி ஆறு வகுப்புகளை எடுக்கின்றனர். ஒரு வகுப்பு அரைமணிநேரம் நீள்கிறது. இப்பாடங்களை ஒலிப்பெருக்கி வழியாக கேட்கும் மாணவர்கள் வீடு அல்லது பொது இடங்களில் அமர்ந்து கற்கின்றனர. தங்களது உத்தரவுகளை மூன்றுமுறை சொல்லி மாணவர்களை பணிக்கின்றனர்.


மாணவர்களைப் பார்க்காமல் பாடம் நடத்துவது கடினமாகவே உள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பார்கள் கவனிப்பார்கள் என்று பாடங்களை மைக்கில் பேசி ஒலிப்பெருக்கி வாயிலாக நடத்துகிறார்கள். ஷைலேஷ் கணிதப்பாடத்தை ஒலிப்பெருக்கி வழியில நடத்துவது கடினமானதுதான். ஆனால் வேறுவழியில்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்.


பாடங்களை கவனிக்கும் மாணவர்கள் அந்த நேரம் முடிந்தாலும் ஷைலேஷிடம் வந்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்று வருகின்றனர். அதில்தான் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களை இவர் புரிந்துகொள்கிறார். அதற்கேற்ப கணிதப்பாடத்தை வெவ்வேறு முறையில் சொல்லிக்கொடுக்க முயல்கிறார். இதில் மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை அறிய அவர்களை ஒலிப்பெருக்கி வழியாக பெயர் சொல்லி அழைப்பதும் உண்டு. இன்னொருபுறம் இணையம் வழியாக கற்பதிலும் பல்வேறு தடைகள் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பத்திற்கு உடனடியாக பழக முடியாத மாணவர்கள் தடுமாறிவருகிறார்கள். பழமையான வகுப்பறை பாடங்களை ஆன்லைனுக்கு ஏற்றபடி மாற்றுவது பெரும் சவாலாக உள்ளது.


டேட்டா கார்னர்


மே மாதம் 2020 யுனெஸ்கோ அறிக்கைப்படி 2.7 மில்லியன் ஆசிரியர்கள் மாறிய சூழலுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரத் தொடங்கியுள்ளனர்.


ஆண்டுதோறும் வெளியாகும் கல்வி அறிக்கையில் 20 சதவீத கிராமப்பகுதி மாணவர்கள் பாடநூல்கள் இல்லாம் உள்ளனர் என்றும், 36 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து நூல்களைப் பெற்று படித்து வருகின்றனர் என்றும் கூறியது.


நாந்திகா திரிபாதி

போர்ப்ஸ் இதழ்



கருத்துகள்