அமைதியான மெக்கானிக்கை அடங்காதவனாக மாற்றும் தங்கை பாசம்! - அசோக் - சுரேந்தர் ரெட்டி
அசோக் 2006
சுரேந்தர் ரெட்டியின் படம். இவர் முதலில் உருவாக்கிய படம் அதனொக்கடே. இதுதான் தமிழில் ஆதி என விஜய் நடிப்பில் வெளியானது.
அசோக் படத்தின் முதல் காட்சியே சண்டைதான். ஜூனியர் என்டிஆர் வில்லன்களை புரட்டி எடுக்கிறார். அதேநேரத்தில் போலீஸ்கார ர்களை கூட்டிக்கொண்டு பிரகாஷ்ராஜ் வருகிறார். அவர் வரும்போது அவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் எலும்புகள் நொறுங்கி கிடக்கிறார்கள். ஜூனியர் என்டிஆர் யார், பிரகாஷ்ராஜூவுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது படத்தின் நெகிழ்ச்சியான கதை.
மெக்கானிக்காக வேலை செய்யும் என்டிஆர் எப்போதும் நண்பர்களுடன்தான் இருக்கிறார். ராஜீவ்தான் அவருக்கு நெருக்கமான தோஸ்த். கோபப்படும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் நண்பன். அப்பா வீட்டை விட்டு விரட்டுவதால் நண்பர்களுடன் தங்கியிருக்கும் என்டிஆர், குடும்பத்துடன் சேர்வதையே முக்கியமாக நினைக்கிறார். அதேசமயம் ஜாலியாக ஆடிப்பாடுபவர் அங்கு சமீராவை பார்க்கிறார். பார்த்தவுடனே மனம் ஓகே சொல்ல ஐ லவ்யூ சொல்லிவிட்டு வந்துவிடுகிறார். பீதியாகும் சமீராவுக்கு ஒன்றும் புரிவதில்லை. பரதநாட்டியம் கற்றுக்கொடுத்துவரும் பள்ளியில் நடன ஆசிரியையாக வேலை செய்கிறார் அவர். இதற்கிடையில் தங்கைக்கு வரன் பார்க்கும் வேலையும் பிரகாஷ்ராஜின் குடும்பதில் தொடங்குகிறது. தங்கை ஒருவரைக் காதலிப்பதாக சொல்ல அவரை திருமண தகவல் மையத்தில் போட்டோ கொடுக்க வைத்து நைச்சியமாக ஒன்று சேர்க்கிறார் என்டிஆர். இந்த நேரத்தில் அந்த ஊர் ரவுடி கே.கேயின் தம்பியுடன் சண்டை வர என்டிஆர் எரிமலையாகிறார். இந்த வேண்டாத சண்டை அவரது காதலையும் குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
மணிசர்மாவின் பாடல்களை அனைத்துமே அசத்தல் பீட்டில் நம்மையறியாமல் ஆட வைக்கின்றன. அமைதியாக வேலை செய்துகொண்டிருக்கும் என்டிஆர் எப்படி எரிமலையாகி அத்தனை ரவுடி குழுக்களையும் ஓட ஓட அடித்து விரட்டுகிறார் என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி. இதில் குடும்பத்தின் அங்கீகாரமும், காதலியின் நெருக்கமும் கிடைக்க அவர் என்ன தியாகங்களை செய்யவேண்டியிருக்கிறது, அப்பாவுக்கு மகனின் குணத்தை புரிந்துகொள்ள முடிந்ததா என்பதுதான் இறுதிக்காட்சி.
பிரகாஷ்ராஜ், சோனுசூட், என்டிஆர், ராஜீவ் கணக்கலா, சமீரா ரெட்டி, வடிவுக்கரசி, ரகுபாபு, பன்ச் பேசும் மெக்கானிக் பட்டறை சிறுவன் என யாரும் சோடை போகவில்லை. பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். கிருஷ்ண பகவான் போலீசாக சில காட்சிகளிலேயே வந்தாலும் வந்த காட்சிகளில் வசனங்களால் சிரிக்க வைத்துவிட்டார்.
அன்பானவன் அடங்காதவன்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக