இடுகைகள்

குங்குமம் பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! நீளமான சிகரெட் ! அமெரிக்காவின் போஸ்டனைச் சேர்ந்த நிறுவனம் , 32 மீ .  நீளமான மரிஜூவானா சிகரெட்டை 40 தன்னார்வலர்களின் உதவியுடன் தயாரித்து வொர்செஸ்டரிலுள்ள டிசியு சென்டரில் நடந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது . தற்போது இது கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படவிருக்கிறது . சாதனை சேலை ! பிரான்சின் காட்ரி நகரில் ரெடியாகியுள்ள கல்யாண புடவை மக்களுக்கு செம சர்ப்ரைஸ் ஷாக் . 8,095 மீ . நீளத்திலுள்ள இப்புடவையின் மூலம் எவரெஸ்ட் மலையையே மூடிவிடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . சாரிட்டி நிகழ்வுக்காக உருவான சேலையை இரண்டு மாதங்களில் , 15 நபர்கள் செதுக்கி உருவாக்கியுள்ளனர் . நெருப்பிலிருந்து எஸ்கேப் ! சீனாவின் சோங்க்விங் நகரிலுள்ள அபார்ட்மெண்ட்டில் தீ . ஃபயர் சர்வீஸ் ஆட்கள் வந்து தீயை அணைக்கும்போதுதான் ஜன்னல் வழியாக ஒருவர் தீயிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதை கவனித்தார்கள் . அருகிலிருந்த கண்ணாடியை உடைத்து தப்ப முயன்றவரை வீரர்கள் காப்பாற்றிய இந்த வீடியோ , உலகெங்கும் எமோஷனல் ஹிட் அடித்துள்ளது .  கேமராவைத் திருடிய பறவை ! நார்வே புகைப்படக்காரர் ஜெல் ராபர்ட்ஸ

காமெடி பிட்ஸ் -ரோனி

படம்
பள்ளத்தில் கனவுகார் ! சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியிலுள்ள ஹார்பின் நகர சாலையில் ஜாலி சவாரி செய்த ஒருவரின் கார் திடீரென சாலை நடுவில் உருவான 3 மீ . அகல பள்ளத்தில் விழுந்தது . ஓனர் மீட்கப்பட்டாலும் குழியில் விழுந்தது 7 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள ரோல்ஸ்‌ராய்ஸ் கார் என்பதால் வீடியோ பரிதாபங்களை அள்ளி ஹிட் அடித்துள்ளது . துபாயின் விஐபி சுட்டி ! பிரைவேட் ஜெட் , ஃபெராரி கார் என வலம்வரும் ரஷீத் பெல்ஹாசா , சல்மான்கான் , மெஸ்ஸி , ஜாக்கிசான் ஆகிய பிரபலங்களோடு எடுக்கும் போட்டோக்கள் செம வைரல் . பிசினஸ்மேன் சைஃப் அகமது பெல்ஹாசாவின் தவப்புதல்வன்தான் ரஷீத் . 15 வயதிலேயே ஆன்லைன் கடையை ஓபன் செய்து பிசினசிலும் , பப்ளிசிட்டியிலும் பின்னுகிறார் . பெண்களுக்கு சுதந்திரம் ! அண்மையில் சவுதி அரேபியா அரசு , பெண்கள் வண்டி ஓட்ட அனுமதித்துள்ளது . ஜூலை 2018 அன்று பெண்கள் புதிய லைசென்ஸ்களுக்கு அப்ளை செய்யலாம் என அரசு அறிவித்தவுடன் குஷியான கார் கம்பெனிகள் குஷியாகி , பெண்களை மையமாக்கி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன . இது உங்கள் டர்ன் , உலகை முன்னோக்கி நடத்தி செல்வோம் என விளம்பர வாசகங்

ஜாலி பிட்ஸ் 7 - விக்டர் காமெஸி

படம்
ஜாலி பிட்ஸ் 7 - விக்டர் காமெஸி ஜப்பானின் பூனை கஃபே ! ஜப்பானின் ஓஹாகி டூ இல்கெனா வரையிலான ரயில் தடத்தில் ரயிலில் திடீரென பூனை கஃபே உதயம் . 30 பூனைகள் செய்த குறும்பில் பயணிகள் , உற்சாகமாகி நெகிழ்ந்து போனார்கள் . ஆதரவற்ற பூனைகளுக்கு ஆதரவு தரும் விதமாக யோரோ ரயில் நிலையத்துடன் பூனைகள் காப்பகம் ஒன்று இணைந்து செய்த ஒருநாள் நிகழ்ச்சி இது . போர்வெல் விளக்கு ! கர்நாடகாவின் விஜயபுரா நகரில் போர்வெல்லில் டார்ச் தவறிவிழுந்துவிட்டது . அப்படியே விட முடியுமா ? என எடுக்க முயற்சித்தார் மிஸ் செய்த வாலிபர் . அவரது நண்பர் குழு அதற்கு செய்த ஹெல்ப் ஆசம் . அப்படியே நண்பரை தலைகீழாக கால்களை பிடித்து போர்வெல் குழியில் இறக்கி சகாயம் செய்த வீடியோ ஸ்லீப்பர் ஹிட் . மெட்ரோவில் மங்கி ! ஜில் ஏசியில் மெட்ரோவில் செல்ல யாருக்குத்தான் பிடிக்காது ! குரங்குகளுக்கும் மனிதர்களுக்கு நிறைய விஷயங்கள் தாறுமாறு தகராறாக இருந்தாலும் ட்ராவல் என்பது இருவருக்கும் பிடித்தமானதுதானே ! டெல்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஆசையாய் பாய்ந்து ஏறி பயணித்த வீடியோதான் இன்று செம ஹாட் வைரல் . நீளக்கால் அழகி ! ரஷ

ஜாலி பிட்ஸ் 5 - விக்டர் காமெஸி

படம்
ஜாலி பிட்ஸ் 4 - விக்டர் காமெஸி 500 டாலர் படிக்கட்டு ! கனடாவின் டோரன்டோவில் ரிட்லி பார்க்கில் படிக்கட்டுதான் பிரச்னை . ரிடையர்டான ஆஸ்டல் டோண்ட் வொர்ரி என பன்ச் சொல்லி சல்லீசாக 500 டாலர்களில் மரப்படிக்கட்டுகளை உருவாக்கிவிட்டார் . நகர நிர்வாகம் இத்திட்டத்திற்காக ஒதுக்கிய தொகை ஜஸ்ட் 65 ஆயிரம் டாலர்கள்தான் . காசு மிச்சம் பாஸ் ! பச்சை படகு ! இங்கிலாந்தில் மராஸியன் பீச்சில் புத்தம் புதிய படகு பயணத்துக்கு ரெடி ! என்ன புதுசு ? இங்கிலாந்தின் பீச்சிலுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை ஏ டூ இசட் வரை சேகரித்து இந்தப் படகை மெக்பாட்டில்ஃபேஸ் சூழல் அமைப்பு இன்ச் பை இன்ச் செதுக்கியுள்ளது . கடலில் போகுமா படகு ? ஜாக்கிங் போகும் வாத்து ! இங்கிலாந்தின் ஹெல்ஸ்டனில் ஜேபி எனும் பெண்கள் உடற்பயிற்சி குழுவில் புதிய மெம்பராக வாத்து ஒன்றும் இணைந்து  சுறுசுறுவென ஜாக்கிங் செல்வது அனைவரையும் ஈர்த்துள்ளது . கட்டுடல் கன்னிகளின் செல்லப்பிள்ளையாக வளையவரும் கனடா வாத்துக்கு கிரஹாம் என பெயர் . கொடுத்து வெச்சவன் கிரஹாம் ! இமோஜி டிரெஸ்ஸில் சாதனை ! லண்டன் , துபாய் , மாஸ்கோ , சாவோ பாலோ , டப்

குங்குமம் பிட்ஸ் 4 !- விக்டர் காமெஸி

படம்
குங்குமம் பிட்ஸ் !- விக்டர் காமெஸி 1. பேலன்ஸ் செய்யும் நாய்கள் !  டெல்லியின் விகாஸ் மார்க்கில் இரண்டு நாய்களை பின் சீட்டிலும் ஒரு நாய் முன்னேயும் வைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் சர்தார்ஜி பெருசு ஒன்று சீறிப்பாயும் வீடியோதான் இன்று மெர்சல் வைரல் . ஒருதுளி கூட கால் தவறாமல் பயணிக்கும் நாயின் துணிச்சல் அளிப்பது செம பீதி . 2. ப்ரூஸ்லீ போலீஸ் ! கரப்பான் பூச்சிக்கெல்லாம் பிரேக் டான்ஸ் ஆடி பீதியானால் எப்படி இன்டர்நேஷனல் போலீஸ் ஆவதாம் ? ஃபேஸ்புக் வீடியோவில் ஆமையைப் பிடித்து பெட்டிக்குள் போட முயற்சித்து போலீஸ் ஒருவர் பீதியாகி ஆடிய கராத்தே கபடிதான் இணையத்தில் அமேசிங் வைரல் . 13 மில்லியன் பேர் இதனை ரசித்துள்ளனர் . காமெடி துரை சிங்கம் !   3. ஒரே வாரத்தில் ரெண்டு லாட்டரி ! கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன்ஏஜ் லேடி ரோஸா டோமிங்யூஸ் , அரிசோனா போகும் வழியில் வாங்கிய லாட்டரிக்கு 5 லட்சம் டாலர்கள் ஜெயித்தது அதிர்ஷ்டம் என்றால் , க்ரீன்பீல்டில் வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா ? 1 லட்சம் டாலர்கள் ! கரன்சி வேட்டை ! 4. பாட்டியின் பரவச டான்ஸ் ! லாஸ் ஏஞ்சல்ஸின்