ஜாலி பிட்ஸ் 5 - விக்டர் காமெஸி



ஜாலி பிட்ஸ் 4 - விக்டர் காமெஸி


500 டாலர் படிக்கட்டு!

கனடாவின் டோரன்டோவில் ரிட்லி பார்க்கில் படிக்கட்டுதான் பிரச்னை. ரிடையர்டான ஆஸ்டல் டோண்ட் வொர்ரி என பன்ச் சொல்லி சல்லீசாக 500 டாலர்களில் மரப்படிக்கட்டுகளை உருவாக்கிவிட்டார். நகர நிர்வாகம் இத்திட்டத்திற்காக ஒதுக்கிய தொகை ஜஸ்ட் 65 ஆயிரம் டாலர்கள்தான். காசு மிச்சம் பாஸ்!

பச்சை படகு!

இங்கிலாந்தில் மராஸியன் பீச்சில் புத்தம் புதிய படகு பயணத்துக்கு ரெடி! என்ன புதுசு? இங்கிலாந்தின் பீச்சிலுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை ஏ டூ இசட் வரை சேகரித்து இந்தப் படகை மெக்பாட்டில்ஃபேஸ் சூழல் அமைப்பு இன்ச் பை இன்ச் செதுக்கியுள்ளது. கடலில் போகுமா படகு?

ஜாக்கிங் போகும் வாத்து!

இங்கிலாந்தின் ஹெல்ஸ்டனில் ஜேபி எனும் பெண்கள் உடற்பயிற்சி குழுவில் புதிய மெம்பராக வாத்து ஒன்றும் இணைந்து  சுறுசுறுவென ஜாக்கிங் செல்வது அனைவரையும் ஈர்த்துள்ளது. கட்டுடல் கன்னிகளின் செல்லப்பிள்ளையாக வளையவரும் கனடா வாத்துக்கு கிரஹாம் என பெயர். கொடுத்து வெச்சவன் கிரஹாம்!

இமோஜி டிரெஸ்ஸில் சாதனை!

லண்டன், துபாய், மாஸ்கோ, சாவோ பாலோ, டப்ளின் என அத்தனை நகரங்களிலும் ஒரே சாதனை பதிவாகியிருக்கிறது. என்ன அது? போன்களில் கலக்கும் இமோஜி டிரெஸில் 531 நபர்கள் ஒன்றாக நின்று கின்னஸ் ரெகார்ட் சாதனை செய்திருக்கிறார்கள். எதற்காம்? இமோஜி படத்திற்காகத்தான். விற்கிறதுக்காகத்தான் விளம்பரம்!

பிட்்ஸ் அன்லிமிடெட்!

சிங்கப்பூரில் ஹல்க்!

யூத்தில் பழனி படிக்கட்டாக பாடியை செதுக்கலாம். வயதாகும்போது? ஏன் முடியாது?என மீசை முறுக்கி, உடலை இறுக்கியிருக்கிறார்  சிங்கப்பூரைச்சேர்ந்த சுவாண்டோ. இவரின்  சிக்ஸ்பேக் கட்டுடல்தான் சோஷியல் தளங்களில் ஹாட் சென்சேஷனல். ஃபோட்டோகிராபரான சுவாண்டோவின் வயது 50!

நதியை காக்கும் இளைஞர்!

காஷ்மீரின் பிலால் அகமதுக்கு, குப்பை பொறுக்குவதுதான் தொழில். நகரிலுள்ள உல்கர் நதியை பாழாக்கிய குப்பைகளை பொறுக்கி பிராஃபிட் பார்ப்பதோடு, தூய்மையும் செய்யும் பிலாலின் டூ இன் ஒன் பணி, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளதோடு நகர் கார்ப்பரேஷனின் தூய்மை அம்பாசிடர் இன்று பிலால்தான்.

சிப்ஸ் பாக்கெட்டில் பாம்பு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ரோட்ரிகோ ஃப்ரான்கோவுக்கு,  ஹாங்காங்கிலிருந்து சிப்ஸ் டின் பார்சலில் வந்தது. கஸ்டம்ஸ் ஆபீசர்களுக்கு டவுட்டாக, டின்னை திறந்தால், உஷ் என விஸ்வரூபமாகி நின்றது பாம்பு. கூடவே 3 ஆமைக்குஞ்சுகள் வேறு. ரோட்ரிகோவுக்கு உயிரிகளை கடத்தியதற்காக 20 ஆண்டு ஜெயில் தண்டனை கன்ஃபார்ம் என கிசுகிசுக்கிறது போலீஸ்.

குழந்தைக்கு பாடிகார்டான நாய்!

கொல்கத்தாவின் பரபர ஹவுரா ரயில்வே ஸ்டேஷன். வெயிட்டிங் ஏரியாவில் திடீரென நாய்களின் ரவுண்ட் அப். எட்டிப்பார்த்தால், ஃபீடிங் பாட்டிலோடு பச்சிளங்குழந்தை அனாதையாய் கிடந்திருக்கிறது. போலீஸ் வரும்வரை குழந்தைக்கு பொறுப்பான பாடிகார்டாய் நின்ற நாய்களை பிஸ்கட் கொடுத்து இன்று பெருமையுடன் பார்க்கிறது ரயில்வே நிர்வாகம்.

தேனீக்காக வெயிட்டிங்!

ஹைதராபாத் டூ புனே செல்லும் விமானம் 65 பயணிகளோடு வானில் பறக்க ரெடி. ஆனால் விமானிக்கு எதிரில் கண்ணாடியில் மொய்த்திருந்த தேனீக்களை தவிர்த்து ரன்வேகூட தெரியவில்லை. அப்புறம் எப்படி விமானத்தை ஓட்டுவதாம். தேனீக்களுக்காக விமானம் வெயிட்டிங்கில் இருந்தது  எவ்வளவு நேரம் தெரியுமா? 1 மணிநேரம்.

ஏர்போர்டில் சூப்பர் பன்ச்!

பிரான்ஸின் நைஸ் ஏர்போர்ட்டில் குழந்தையை இடுப்பில் வைத்தபடி இங்கிலாந்துக்காரர் EZY2122 என்ற லண்டன் செல்லும் ஃபிளைட் ஏன் பாஸ் லேட்? ஏன் லேட் என்று ஒரு வார்த்தைதான் கேட்டார். கவுண்டரிலிருந்த ஈஸிஜெட் ஊழியர் ஆக்ரோஷமாக ஓங்கி ஒன்றரைடன் வெயிட்டில் இங்கிலாந்து சிட்டிசனின் விட்டார் பாருங்கள் பன்ச்சை. போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து நடந்து வருகிறது.

விண்வெளியில் யோகா!

ஷில்பா ஷெட்டியாய் வளைந்து யோகா பூமியில் சாத்தியம். ஆனால் புவிஈர்ப்புவிசை இல்லாத இடத்தில்? விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஜேக் ஃபிஸ்ச்சர், பெக்கி வொய்ட்சன் ஆகியோர் போட்டிபோட்டு செய்த பெட்டிங் யோகா போஸ்கள்தான் இன்று இணையத்தில் ஹாட் வைரல்.

ஓடும் வண்டியில் ஐபோன் அபேஸ்!

நெதர்லாந்தில் ஓடும் வண்டியில் ஆட்டையைப் போட்டு திருடுவது புதுசல்ல. அத்தனையும் ஆல் நியூ அரிய ஐபோன்கள் பாஸ்! 5 நபர்களை வேனும் போனுமாக கைதுசெய்த போலீசார் ஐபோன்களை டோட்டலாக  மீட்டனர். அதன் மதிப்பு 5 லட்சத்து 90 ஆயிரம் டாலர்கள். இதேபோல அச்சு அசலாக நடந்த முன்னர் நடந்த க்ரைம்களின் எண்ணிக்கை 17. அதிலும் இதே ஆட்களின் பெயர்களை எழுதலாமா என போலீஸ் யோசித்து வருகிறது.  



நன்றி: குங்குமம் வார இதழ்
 











பிரபலமான இடுகைகள்