இன்டர்வியூ டிப்ஸ்! புதைகுழி கேள்விகள்! -ச.அன்பரசு



இன்டர்வியூ டிப்ஸ்!

புதைகுழி கேள்விகள்! -ச.அன்பரசு

இன்டர்வியூவை இலவம் பஞ்சாய் ஊதித்தள்ளுமளவு கெப்பாசிட்டி  உங்களிடம் டன் கணக்கில் இருக்கலாம். ஆனால் சிலசமயம் வாயில் வாந்தி வருவதுபோல துடுக்கான சொற்கள் வெளிவந்துவிட்டால், வேலை போச்சு. சில வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தினாலே வேலை நிச்சயம்.

உங்கள் கம்பெனி எனக்கு என்ன செய்யும்?

நாயர்கடையில் ஸ்ட்ராங் டீ கேட்பது எப்படி சாதாரணமோ அதைப்போலத்தான் பலருக்கு இந்த கேள்வியும். "நம்புவீர்களோ இல்லையோ ஹெச்ஆர்களிடம் வேலைக்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் நம்பர் 1 கேள்வி இதுதான்" என்கிறார் மான்ஸ்டர் தளத்தின் வேலைவாய்ப்பு ஆலோசகர் சார்லஸ் புர்டி. இப்படி கேள்வி கேட்கும் மாஸ் ஜீனியஸ்களுக்கு வேலைதர நிறுவனங்கள் என்ன முட்டாள்களா? எனவே அவசிய கேள்விகளை கேட்டால் போதும்

எனக்கு இந்த வேலை வேண்டும்!

 நீங்கள் வேலைகேட்டு சென்றிருக்கிறீர்கள். இப்படியொரு கேள்வியை உங்களிடம் வேலைகேட்டு வருபவர் கேட்டால் அவரை தேர்ந்தெடுப்பீர்களா? "கம்பெனியின் வளர்ச்சி என்ற கோட்வேர்டை பயன்படுத்தினாலே போதும். நேர்காணல் செய்பவர், தம் ஊழியர்களுக்கு இன்க்ரிமென்ட் கொடுக்கிறார்களா இல்லையா உள்ளிட்ட தகவல்கள் வரை கூறிவிடுவார்கள்" என்கிறார் கிளாஸ்டோர் இணையதளத்தின் எழுத்தாளரும் ஹெச்ஆருமான சாரா க்ரீசன்பேச்.

இது நான் விரும்பும் வேலையில்லை!

பலரும் மற்றொரு ட்ரீம்ஜாப்புக்கான முயற்சியில் இருப்பவர்கள்தான் ப்ரோ! ஆனால் அதை இன்டர்வியூவிலேயே பச்சை மண்ணாக சொல்லிவைத்தால் என்னாகும்? பொதுவாக இதற்கு நேர்காணல் செய்பவர்களிடம் ரியாக்ஷன் இருக்காது. இரண்டு, அவர்களின் கம்பெனியை கால்தூசிக்கும் கேவலமாக மதிக்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஸ்ட்ராங்காக ரெஜிஸ்டராகும். "வேலையில் கில்லி என உங்களுக்கு ஏக டிமாண்ட் இருந்தால் அதை லைட்டாக கோடு போட்டு காட்டுவதில் தவறில்லை" என்கிறார் நிதித்துறை வேலைவாய்ப்பு கவுன்சிலரான ஆண்ட்ரூ ஃபென்னல்.

வேலைக்கு பொருத்தமானவனில்லை, ஆனால்!

இப்படி திடீரென கான்ஃபிடன்ஸ் கந்தலாகி பேசினால், "அப்படியா? அப்புறம் ஏன் நேரத்தை வீணாக்கிக்கிட்டு, கிளம்புங்க. நானும் சேட்டா கடையில் டீக்குடிக்க போறேன்" என நேர்காணல் செய்பவர் கிளம்பிவிடுவார். உங்களுக்கு உங்களது டேலன்ட் மேலேயே டவுட் வந்தால் எப்படி? நீங்கள் சக்சஸ் மனிதர் என்பதை யுனைடெட் பிரதர்ஸ் போல கச்சித ப்ரேமிட்டு காட்டினால் ஜெயம் நிச்சயம்.

எனது மேனேஜர் ஒரு சிடுமூஞ்சி!

உங்களை வேலைக்கு எடுப்பவர், அந்த வேலைக்கான விஷயங்களை செய்வார் என்ற கான்ஃபிடன்டில்தானே எடுப்பார். உங்களது முந்தைய வேலை பற்றி அவர்களுக்கு என்ன கவலை? முந்தைய வேலையில் பாசிட்டிவாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை பேசினால்தான் எங்குமே ரெஸ்பெக்ட் உண்டு. அது காயலான்கடை கம்பெனி, அதுக்கு ஒட்டக மூஞ்சி  மேனேஜர் என ஆக்ரோஷமானால் உங்களுக்கு நெகடிவ் மார்க்தான் கிடைக்கும். எனவே மேற்சொன்ன வார்த்தைகளை முடிந்தளவு தவிர்த்து இன்டர்வியூவை எதிர்கொண்டால் சக்சஸ் அன்லிமிடெட்.

நன்றி: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்