ஏன்?எதற்கு?எப்படி? - ரோனி ப்ரௌன்
ஏன்?எதற்கு?எப்படி? - Mr. ரோனி
மழைக்காடுகளை திரும்ப
வளர்க்க முடியுமா?
உலகம் முழுவதும்
மழைக்காடுகளை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை பல்வேறு நாட்டு அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. பிரேசில்
அரசு, 2030 ஆம் ஆண்டுக்குள் 12 மில்லியன்
ஹெக்டேர் நிலங்களில் வனத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளது. இயற்கையாக உருவாகும் காடுகளின் தன்மையை, மரக்கன்றுகளை
ஊன்றி உருவாக்கும் காடுகள் பெறாது. விலங்குகளின் பல்லுயிர்த்தன்மையையும்
இதில் ஏற்படுத்துவது கடினம். எனவே இருக்கும் காடுகளை அதன் தன்மை
மாறாமல் காப்பதே சிறந்தது.
நிலவில் நட்டுவைக்கப்பட்ட
கொடிகள் இன்றும் உள்ளதா?
நிலவில் இன்றுவரை
ஆறு கொடிகள் ஊன்றப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் அப்போலோ விண்கலம் ஊன்றிவைத்தது
அதில் ஒன்று. ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால் நீல் ஆம்ஸ்ட்ராங்,
அட்ரியன் ஆகியோர் ஆகியோர் இருவரும் அக்கொடியை எடுத்துவிட்டனர்.
லூனார் மூலம் எடுத்த படங்களில் மீதியுள்ள 5 நைலான்
கொடிகளும் நின்றாலும், அவை சூரிய ஒளியால் நிறமிழந்து வெள்ளையாகி
விட்டன.
ஒருவர் இறந்ததும்
அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் உடனே செயலிழந்துவிடுமா?
நிச்சயமாக இல்லை. உடலின்
இயக்கத்திற்கு ஆக்சிஜன் அடிப்படை. முதலில் மூளை, நரம்புசெல், இதயம், கல்லீரல்,
கிட்னி, கணையம் ஆகியவை ஒரு மணிநேரத்திற்குள் ஆக்சிஜன்
கிடைக்காவிட்டால் செயலிழந்துவிடும். தோல், இதயவால்வுகள், தசைநாண்கள், விழிப்படலம்
ஆகியவை ஒருநாள் தாக்குப்பிடிக்கும். உடலின் ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்கள்தான்
இதில் கெட்டி. உயிரற்ற உடலில் முழுதாக 3 நாட்கள் ஸ்மூத்தாக செயல்படும்.
அதிர்ச்சி செய்திகளை
கேட்கும்போது பலரும் வாயைப் பொத்திக்கொள்வது ஏன்?
உளறிவைத்தால் ஏதாவது
வம்பு வந்துவிடுமே என்பதற்காக நிச்சயம் அல்ல. உண்மையிலேயே உங்களுக்கு ஷாக் ஏற்பட்டால்
அங்கேயே பதறி அலறிவிடுவீர்கள் என்பதுதான் நிஜம். அப்படி நடக்காமல்
நாசூக்காக வாயை பொத்துகிறீர்கள் என்றால், அதிர்ச்சியை பழகி அதனை
ஏற்க துணிந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். மேலும் அதிக அபாயமில்லை,
அலறி கூட இருப்பவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்ககூடாது என்ற லேட்டரல்
திங்கிங் கூட காரணமாக இருக்கலாம்.
நன்றி: முத்தாரம் வார இதழ்