நேர்காணல்: ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் தமிழில்: ச.அன்பரசு


நேர்காணல்: ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்
தமிழில்
: .அன்பரசு



ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முதலாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதே பெரிய ஆச்சர்யம். ஐதராபாத் அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள சுழற்பந்து வீரரிடம் இனிய மாலை வேளையில் உரையாடினோம்.

இன்று ஐபிஎல்லில் சுழற்பந்து வீச்சில் அசத்திவருகிறார்கள். ஆனால் முதலில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நம்பினீர்களா?

நிச்சயம் இல்லை. ஏனெனில் பாகிஸ்தானில் பிறந்து தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே அவநம்பிக்கைதான் என்னிடமிருந்தது. டி20 கிரிக்கெட்டின் டாப் 10 தரவரிசையிலும் கூட நான் இடம்பெறாதபோது எப்படி நம்பிக்கை வரும்? ஐதராபாத் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன். ஏலத்தொகையை விட ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பு என்பதையே பெரிதாக நினைத்தேன்.

ஐபிஎல் விளையாட்டில் பங்கேற்ற வீரர்களோடான அனுபவங்களைக் கூறுங்கள்.

நான் முன்னமே டி20 விளையாடியிருந்தாலும் ஐபிஎல்லில் தொடக்கத்தில் சிறிது பதட்டம் இருந்தது உண்மைதான். டேவிட் வார்னர், யுவ்ராஜ்சிங், விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகிய எக்ஸ்பீரியன்ஸான வீரர்களோடு எவ்வளவு பேசினாலும் போதாது. முதல் மேட்ச் முடிந்ததும் நான் நன்றாக விளையாடியதாக அணியினர் கூறியபோது ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

பொதுவாகவே லெக் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பதைப் பற்றி பேசுவார்கள். உங்களுடைய கருத்து என்ன?

சுழற்பந்து வீச்சில் வேறு என்ன சாதிக்க முடியும்? ஆனால் நான் ஐபிஎல்லில் அதிகளவு டாட் பந்துகளை வீசவே முயற்சிக்கிறேன்.இத்திட்டத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினால எங்கள் அணியின் வெற்றி நெருங்கிவரும். குஜராத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்ததே இந்த சீரியஸின் பெஸ்ட். ஈரமாக உள்ள பந்தில் சுழற்பந்து போடுவது சிரமமானது. ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்சாய் முன்னமே ஈரப்பந்துகளில் சுழற்பந்து வீசி பழக கூறியது உதவியாக இருந்தது.

ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். மெல்ல ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வளர்ந்து வருகிறதா?

ஐபிஎல் ஏலத்தில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் எங்கள் இருவருக்கும் வந்த மெசேஜ்களுக்கு அளவேயில்லை. அடுத்து முகமது நபியும் நானும் சேர்ந்து விளையாடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்கான மற்றொரு காரணம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதே ஆப்கன் கிரிக்கெட் அணி வளர்ந்து வருவதற்கான அறிகுறிதான். அடுத்து வரும் ஜூலையில் எம்சிசி கிரிக்கெட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட இருக்கிறோம். இது எங்கள் முக்கியமான நகர்வும் கூட

நன்றி: Chetan Narula,livemint.com
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ்


பிரபலமான இடுகைகள்