பசுமை தகனம் அறிமுகம்! - கா.தமிழ்மாறன்




பசுமை தகனம் அறிமுகம்! - கா.தமிழ்மாறன்

இறப்பவர்களை பொதுவாக என்ன செய்வோம்? எரிப்போம், புதைப்போம் அல்லது தற்போது மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட சோதனைகளுக்கு உடலை கொடுப்பது பிரபலமாகி வருகிறது. ஆனால் தற்போது பசுமை தகனம் எனும் முறை பிரபலமாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமான பசுமை விரைவில் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஸ்லெண்டர் மரங்கள் சூழ இருந்த பிராட்ஷா லைஃப் சென்டர் கட்டுமானமே ப்ரெய்ரி ஸ்டைலில் புதுமையாக கட்டப்பட்டதாகும். உடல்களை கரைக்க உதவும் அல்கலைன் நீர்மத்தைக் கொண்டுள்ள மெஷினின் விலை 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள்.

கார நீர்மம் கொண்ட பெட்டி 6 அடி நீளம், 4 அடி அகலமும், பத்து அடி ஆழமும் கொண்டது. அதிலுள்ள வட்டவடிவ மூடி நீர்மூழ்கி கப்பலின் கதவை நினைபடுத்துகிறது. நீர்மத்தில் உடல் கரைந்து போவதை உறவினர்கள் பார்க்கும் வசதியும் உண்டு. ஆனால் அந்த மனதைரியம் எத்தனை பேருக்குண்டோ?

எப்படி செயல்படுகிறது?

கருப்பு நிற கம்பளியால் உடலை மூடி, வட்டவடிவ கதவைத்திறந்து உடலை உள்ளே வைக்கிறார்கள். சைக்கிள் என்ற ஆப்ஷனை அழுத்தும் ஜாஸன் வேதியியல் மற்றும் உயிரியியலில் பட்டம் பெற்றவர். நீரோடு பொட்டாசியம் ஹைட்ராக்சைடு என்ன விகிதத்தில்(65:600lb) கலக்கவேண்டும் என முடிவு செய்து, அதன் PH அளவை 14 என அதிகரித்து, வெப்பநிலையை 152 டிகிரி செல்சியஸிலை இக்கலவையை வெப்பப்படுத்துகின்றனர்.

90 நிமிடங்கள் போதும். பிறகு மூடியை திறந்து பார்த்தால் கார நீர்மத்தில் தசைகள் கரைக்கப்பட்டு விடுவதால், ஸ்ட்ரெச்சரில் ஈரமான எலும்புகள் மட்டுமே மிச்சமாகும்.பின் 120 டிகிரி செல்சியசில் எலும்புகள் நன்றாக தசைகள் இல்லாமல் சுத்தப்படுத்தியபின் செயல்முறை முடிவுக்கு வருகிறது. தசையை கரைத்த நீர் கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. பயப்படவேண்டாம் இதில் இறந்தவரின் டிஎன்ஏ இருக்காது என்பது பிராட்ஷா வாக்கு. கிரிமுலேட்டர் என்ற கருவியில் எலும்புகள் பொடியாக்கப்படுகின்றன. தற்போது பிராட்ஷாவின் நிறுவனம், ஒருநாளைக்கு 1,100 உடல்களை தகனம் செய்து வருகிறது. பிர்மிங்காமின் சாண்ட்வெல்லில் பிராட்ஷாவின் நிறுவனம், இவ்வாண்டில் இறுதியில் தகன நிறுவனம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறது.

1
உலகெங்கும் இறப்பவர்களின் அளவு - 1,50,000
தற்போதைய மக்கள் தொகை - 7.5 பில்லியன்.
அதிகரிக்கும் மக்கள் தொகை - 11 பில்லியன்.
கல்லறை அமைப்பதால் உருவாகும் கார்பன் அளவு -320 கி.கி.

2
பசுமை தகனத்தில் 7 மடங்கு கார்பன் மாசு குறைவு.
புதைக்க 63.66, எரிக்க 43.47, பசுமை தகனத்திற்கு 2.56 யூரோக்களே தேவை. 
  



  



பிரபலமான இடுகைகள்