கிரீட்டிங் கார்டு சீக்ரெட்ஸ்! - கா.சி. வின்சென்ட்



கிரீட்டிங் கார்டு சீக்ரெட்ஸ்! - கா.சி. வின்சென்ட்


இன்று ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் அனுப்பாத எந்த செய்தியையும் நாம் க்ரீட்டிங்கார்டில் அனுப்பிவிட முடியாது. ஆனாலும் உலகளவில் க்ரீட்டிங் கார்டிற்கான மவுசு தனி. ஏறத்தாழ 5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தை இது.

தனிப்பட்ட ஒருவரின் நினைவுக்கானது!

காதலர் தினத்திற்கோ, திருமண நாளிற்கோ க்ரீட்டிங் கார்டு எழுதும்போது டி.ஆர் படத்தின் அத்தனை கேரக்டர்களுமா உங்களுக்கு நினைவுக்கு வரும்? காதலி அல்லது மனைவி. ஹால்மார்க் க்ரீட்டிங் கார்டு நிறுவனத்தின் எழுத்தாளர் "உண்மையான உறவு குறித்து அந்தரங்கமான அன்பை தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு க்ரீட்டிங் கார்டு ஏற்றது" என்கிறார்.

நிராகரிப்பு அதிகம்!

ஜாலியான விடுமுறைக்கு க்ரீட்டிங் கார்டு 150 தயாரிக்கிறோமென்றால் அதில் 10% விற்றுப்போனால் பெரிய விஷயம் என்கிறார் கோவன். இன்டர்நேஷ்னல் காமெடியை சிம்பிளாக எழுதியிருந்தாலும் அதனை ஒருவர் வாங்குவது யார் கையிலுள்ளது? பெரும்பாலான ஐடியாக்கள் குப்பைக்குத்தான் போகும். தளராத மனது கார்டுகளை உருவாக்க தேவை.

மனித முகங்களே கிடையாது!

பெரும்பாலும் க்ரீட்டிங் கார்டில் அழகிய பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள் என இருந்தாலும் மனித முகங்கள் பெரும்பாலும் இடம்பெறாது. காரணம் அது கார்டில் அவ்வளவு கிளாமர் ஏற்றாது என்பதுதான். "கார்டை பெறுபவர் இளைஞராகவோ, முதியவராகவோ கூட இருக்கலாம். முகத்தை கார்டில் வைத்தால் அது அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்" என்பது கிராபிக் டிசைனர் ஹார்பர் வாக்கு.

வர்ணஜால குழப்பங்கள்!

தன் கிரியேட்டிவிட்டியை ஒரே க்ரீட்டிங் கார்டில் உலகிற்கு காட்ட நினைப்பது பெரிய தவறு. சாம்பல், கருப்பு,சிவப்பு ஆகிய வண்ணங்கள் க்ரீட்டிங் கார்டிற்கு ஏற்றவையல்ல. சிவப்புவண்ண க்ரீட்டிங் கார்டில் கருப்பு எழுத்துகள் தெரியாது என்பதால் போஸ்ட் ஆபீசில் பஞ்சாயத்தாகவும் வாய்ப்புள்ளது.

எழுத்துக்களோடும், எழுத்துகளற்றும் கார்டுகள்!

பெரும்பாலான கார்டுகளில் ஆங்கிலத்தில் அத்தனையும் இருக்கும் வித் லவ் அதன் பெயரில் உங்கள் பெயர் எழுதி கார்டை அனுப்பிவிட்டு, அடுத்த சோலிக்கு செல்லலாம். சில கார்டுகளில் உள்ளே பளிச்சென எதுவுமே இல்லாமல் எழுதுவற்கு ஏராள இடம் இருக்கும். நேசத்திற்குரியவரை பற்றி நடுப்பக்க மாரத்தான் கட்டுரை கூட எழுதலாம். சில நிறுவனங்கள் அப்படி வெறுமனே வெள்ளையாக விட்டால் யாரும் கார்டுகளை திறந்து கூட பார்க்கமாட்டார்கள்? எப்படி விற்கும்? என லாஜிக் பேசுகின்றனர். உங்களுக்கு எது தேவையோ அதை செலக்ட் செய்யுங்கள். பேரன்பு உறவுகளை தாயன்பு எழுத்தால் தாலாட்டுங்கள்.

நன்றி: முத்தாரம் வார இதழ்