"பிஜேபி ஒரு பாசிஸ்ட் கட்சி" நேர்காணல்: பினராயி விஜயன், முதல்வர், கேரளா. தமிழில்: ச.அன்பரசு




"பிஜேபி ஒரு பாசிஸ்ட் கட்சி"
நேர்காணல்: பினராயி விஜயன், முதல்வர், கேரளா.
தமிழில்: .அன்பரசு

அண்மையில் முறையற்ற மாட்டிறைச்சி வணிக்கத்தை முறைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. வங்கம், கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் தடைக்கு எதிராக மாட்டிறைச்சி விருந்து நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

பொதுவாகவே இடதுசாரிகளின் அரசு நிலச்சீர்திருத்தம், கல்விஅறிவு குறித்த புதுமை திட்டங்களுக்கு பெயர் பெற்றவர்கள். உங்களது அரசின் நோக்கம் என்ன?

ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் அரசின் நோக்கம். இடதுசாரி அரசுகளின் திட்டங்களை மேம்படுத்தினாலே இதற்கு போதுமானது. அரசு பள்ளியில் பல்வேறு அட்வான்ஸ் தொழில்நுட்பங்களின் மூலம் கற்றல் திறனை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். Aardram, LIFE ஆகிய ஆகிய திட்டங்களின் மூலம் விலை குறைவான மருந்துகளை மக்களுக்கு வழங்கவும், வீடற்றவர்களே இல்லாதவாறு கேரளாவை மாற்ற உழைத்து வருகிறோம்.

கல்வி, மருத்துவம் கடந்து விவசாயத்திற்கு என்ன திட்டமிருக்கிறது? உணவுத்தேவைக்கு கேரளா பிற மாநிலங்களைத்தானே நம்பியிருக்கிறது?

மக்களுக்கு நல்ல உணவை வழங்குவது அரசின் கடமை. கேரளாவின் பிரச்னையை புரிந்துகொண்டுதான் பயோஃபார்மிங் முறையில் விவசாயம் செய்து தற்சார்பு கொண்ட மாநிலமாக மாற்ற உழைத்து வருகிறோம்.

கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், எப்படி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்?

கேரளா என்பது கனிம வளங்களைக் கொண்ட மாநிலமல்ல. ஐம்பதாயிரம் கோடி முதலீடு கொண்ட KIIFB அமைப்பு மூலம் பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கான ஆக்கப்பூர்வத் தூண்டுதலை உருவாக்கி வருகிறோம்.

நீங்கள் இடதுசாரி கட்சியிலிருந்து கேரள முதல்வராகியிருக்கிறீர்கள். மத்தியில் கருத்தியலில் முற்றிலும் எதிரான பா..க பிரதமர் பதவி வகிக்கும் சூழலில், டெல்லியில் உங்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கிறது?

நீங்கள் கூறியபடி இருவிதமாகவும் அணுகலாம். அண்மையில் கேரளா தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுக்கான அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்தும் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மே 2016 ஆம் ஆண்டு பிரதமர் உட்பட பல தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவர் உலகத்தரமான மருத்துவமனையை உருவாக்கித்தர வாக்குறுதி கூறினார். அந்த மருத்துவமனைக்கான தயாரிப்பில்தான் இருக்கிறோம். சுமூகமான உறவு மாநிலத்திற்கும் மத்தியிலும் இருக்கிறதென நம்புகிறோம்.

இடதுசாரிக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக பா..கவின் எழுச்சி,தேர்தல் வெற்றி குறித்து கூறுங்களேன்.

பா..க ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அபாயகரமான கட்சி. ஆர்எஸ்எஸ் பன்மைத்துவத்தை விரும்பாத அமைப்பு. இதன் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சி ஏற்றதல்ல. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கட்சி மாறி, பா..கவில் இணைவது, இருகட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லையெனவே காட்டுகிறது. தாராளவாதம், உலகமயமாக்கும், தனியார்மயமாக்கம் ஆகியவற்றை காங்கிரஸ் தொடங்கியது. பா..க அதனை தொடர்கிறது. இடதுசாரிகள் கேரளா, திரிபுரா என இரு மாநிலங்களில் ஆட்சி புரிந்தாலும் அவர்களைக் கண்டு வலதுசாரிகள் பயப்படுகிறார்கள். உதிரிக்கட்சிகளை திரட்டி அழிக்க நினைக்கிறார்கள் திரிபுராவில் பா..க ஈடுபட்டுவருவதும் அம்முயற்சியில்தான்.

பா..க பிற கட்சிகளிடமிருந்து மாறுபட்டது என்றீர்களே, அதனை ஃபாசிஸ்டு கட்சி என குறிப்பிடுகிறீர்களா?

ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியல் ஜெர்மனியின் நாஜிக்கட்சி சர்வாதிகாரி ஹிட்லரிடமிருந்து உருவாகி வந்தது. அவர்களின் அமைப்பின் கட்டமைப்பு முசோலியின் ஃபாசிஸ்ட் கட்சியை ஒத்தது. பிறகு பா..க வின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்

ஆர்எஸ்எஸ்காரர்கள், சிபிஐஎம் தொண்டர்கள் என இருவருமே தாக்கப்படுவதும் இறப்பதும் கேரளாவில் அதிகம் நிகழ்கிறதே ஏன்?

இடதுசாரிகளை அழிக்க ஆர்எஸ்எஸ் கையாளும் வழிமுறைகளில் கொலைவெறித்தாக்குதலும் ஒன்று. இதைக்கட்டுப்படுத்த நாங்கள் கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதல் அளவை குறைத்துள்ளோம். மாநிலத்தின் அமைதியை நிலவச் செய்ய ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையிடமும் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். எங்களின் நிலைப்பாடு இதுவே.

நன்றி: ஸ்டான்லி ஜானி, இந்து ஆங்கிலம்
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ்


பிரபலமான இடுகைகள்