இனவெறியைத் தூண்டும் இணையம்! - ச. அன்பரசு


இனவெறியைத் தூண்டும் இணையம்! - . அன்பரசு


வெறுப்பூட்டும் பேச்சு, வன்முறை என்பது ஒருநாளில் ஒருவரின் மனதில் உருவாகி விடுவதில்லை. மெல்ல சிறிது சிறிதாக வளரும் அதனை வளர்க்க பல்வேறு விஷயங்களும் தூண்டுதலாகின்றன. தன் தற்கொலையை வீடியோ எடுத்து ஸ்டெப் பை ஸ்டெப் விவரிப்பது வரை அதன் விளைவுகள்தான்.

தற்போது உங்கள் கணினியில் கூகுள் அல்லது பிங் சர்ச் எஞ்சினில் babies, hand என்று டைப் செய்து தேடினால் வரும் ரிசல்ட்டுகள் அனைத்தும் வெள்ளையினத்தவர்களுடையது மட்டும்தான். "இணையத்தில் நாங்கள் தரும் படங்கள் அனைத்தும் ஒருவர் தனக்கு தேவை குறித்து எப்படி தேடியிருக்கிறார் என உலகம் முழுவதும் கிடைத்த கண்டறிந்தவற்றிலிருந்து முடிவு செய்கிறோம்" என விட்டேத்தியான பதிலைக் கூறுகிறது. இவை குறித்து 2015 ஆம் ஆண்டு கிராபிக் டிசைனராக ஜோகன்னா ப்யூரை World White Web project  என்ற இணையதளத்தை தொடங்கி சர்ச் எஞ்சின்கள் தரும் படங்களுக்கு மாற்றான படங்களை தரத்தொடங்கினார். ஆனால் பின்னாளில் அவரால் இத்தளத்தை பராமரிக்க முடியவில்லை.

"நான் முதலில் இத்தளத்தை தொடங்கியபோது மக்கள் பலரும் பேரதிர்ச்சி. ஆனால் இன்று சர்ச் எஞ்சின்கள் தரும் முடிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி" என உற்சாகம் மிளிர பேசுகிறார் ஜோகன்னா ப்யூரை. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதுகலை மாணவரான ஜாய் ப்யூலாவினிக்கு வேறொரு பிரச்னை.

2006 ஆம் ஆண்டு இவர் Algorithmic Justice League (AJL) என்ற திட்டத்தை உருவாக்கியவராவார்.தன் கல்லூரி ப்ரொஜெக்டிற்காக முகத்தை அடையாளமறியும் சாப்ட்வேரை உருவாக்கினார். ஆனால் இவர் கருப்பின பெண் என்பதால், சாப்ட்வேர் இவரின் முகத்தை அனுமதிக்க மறுக்க, வேறுவழியின்றி வெள்ளை முகமூடியை பயன்படுத்தி வருகிறார். ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகும் இப்பிரச்னை தீரவில்லை. தற்போது இவருக்கு உதவுவது வெள்ளை முகமூடியல்ல. இவரின் வெண்ணிறத்தோழி. "உண்மையில் இது எவ்வளவு விரக்தி தருகிற அனுபவம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்" என்கிற ஜாயின் ப்ரொஜெக்டை இவரது கல்லூரி நண்பர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பல்வேறு அல்காரிதங்களோடு சோதித்தனர். தோல் புற்றுநோயை கண்டுபிடிக்கும்படி அல்காரிதம் வேலை செய்தது.

உண்மையில் அல்காரிதங்களை உருவாக்கும் நிறுவனங்களிலுள்ள பெரும்பான்மை மனிதர்கள் வெள்ளை இனத்தவர்களாக இருக்கும்போது, கருப்பினத்தவர்களின் படங்கள் எப்படி உங்களுக்கு கிடைக்கும்?  மேலோட்டமாக எதுவும் தெரியாவிட்டாலும் ஆழமாக இவை மனதில் உருவாக்கும் விளைவுகள் சாதாரணமல்ல.

இதற்கான தீர்வுகள் என்ன?

"அனைத்து அல்காரிதங்களையும் தவறான இனவெறி தன்மை கொண்டவை என்று கூறிவிட முடியாது.ஏனெனில் அல்காரிதத்திற்கான முடிவு எடுப்பதற்கான அனுமதியை வழங்குவதே மனிதர்கள்தான் என்பதால் இதனை சரி செய்ய முடியாது என்பதெல்லாம் கிடையாது" என நம்பிக்கையோடு பேசிய பேராசிரியர் சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன், இதற்கான பல்வேறு ஆலோசனைகளை நமக்கு வழங்குகிறார்.

 பல்வேறு ஒளிப்படங்களின் தொகுப்பை அல்காரிதங்களுக்கு தேடச்சொல்லி கற்றுத்தந்து பழக்க வேண்டும்.

பல்வேறு சாப்ட்வேர் வணிகர்களுக்கும் இதனை சரியான விளக்கவேண்டும்.

படங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும் அல்காரிதங்களின் திறனை தொடர்ந்து மேம்படுத்தவேண்டும்.

இனவெறி நிறுவனங்கள்!

கூகுள் 19% அமெரிக்கர்கள் 1% கருப்பினத்தவர்கள்
மைக்ரோசாஃப்ட் 17.5% அமெரிக்கர்கள் 2.7% கருப்பினத்தவர்
ஃபேஸ்புக் 17.5% அமெரிக்கர்கள், 1% கருப்பினத்தவர்.

நன்றி: முத்தாரம் வார இதழ்


பிரபலமான இடுகைகள்