இடுகைகள்

மகரந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

படம்
  உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும் ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம் தீண்டுவதே இல்லை என்னை… என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின் வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது. அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில் பெருகத் தொடங்கியிருந்தது. உன் கருணையினால்… நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது செடிகளிலேயே மலர்கள் அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது 5.4 முன்னெப்போதோ நான் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய் கருதிக்கொள்ளத்தான் வேண்டும்… ஒரு தேவதையைப் போல என்னோடு நீ வந்து இருந்து, நடந்து அற்புதம் புரிந்ததை இனி எப்போதும் நான் மறக்கவியலாது. ஆனால், நான்தான் சாத்தான் நான் உன்னை நுரைத்து ததும்பும் என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய் இட்டு வைத்தேன். மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான் இருக்குமென்பது எனக்கு புரியவில்லை இவ்வளவு நடந்தும்… கசப்புகள் மறந்து நான் உனக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய் என்று… நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்து கிடக்கின்றன ப்ரியங்கள்….   தொகுப்பு அன்பரசு

வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....

படம்
  வண்ணத்துப்பூச்சி நடை!  வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும்.  காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.  வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.  ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.  பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த  நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்றன. மேற்சொன்ன பொருட்களின் வாசனை மற

பிட்ஸ் - தேனீக்கள்

படம்
  பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ.  தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன.  அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன.  9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம்.  National geographic kids Mar.2022

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ