தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
அமெரிக்காவின் தேசிய மலர் எது?
1986ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ரோஜா, அமெரிக்காவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.
தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?
ஜோசப் காட்லெப் கோல்ராய்டர் என்ற ஆராய்ச்சியாளர், தேனீ மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையை 1761ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவர்தான், செடிகள் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை செய்வதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தவர்.
லில்லி விக்டோரியா அமேசானிகா என்ற தாவரத்தின் சிறப்பு அம்சம் என்ன?
பிரமாண்டமானது. அமேசான் ஆற்றில் வளரக்கூடியது. இதன் இலைகள் ஆறு அடி நீளம் கொண்டவை. இலைகளில் சிறிய குழந்தையைக் கூட வைத்துக்கொள்ளலாம். வளர்ச்சி அடைந்த இலைகள் நாற்பத்தைந்து கிலோ எடையைத் தாங்கும். பூக்கள், முப்பது செ.மீ. அளவு கொண்டவை. இரண்டு இரவுகள் மட்டும்தான் மலர்ந்து பூக்கள் இருக்கும். முதலில் வெள்ளையாக இருந்து இரண்டாவது இரவில் ரோஸ் நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காட்சியளிக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு இரவுகளுக்கு பிறகு பூக்கள், நீரில் மூழ்கிவிடும்.
ஆரஞ்சு மரத்தின் காய்ப்பு எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்?
தோராயமாக ஆரஞ்சு மரம், ஐம்பது ஆண்டுகள் காய்க்கும். அதையும் தாண்டி காய்த்தால் அது இயல்புக்கு மாறானது அல்ல. சில ஆரஞ்சு மரங்கள், நூற்றாண்டு காலம் காய்ப்பதுண்டு. மரம் இருபது அடி உயரம் வளர்கிறது. சில மரங்கள் முப்பது அடி உயரத்தையும் எட்டுவதுண்டு.
விதையில்லாத தர்ப்பூச்சி உள்ளதா?
ஐம்பது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தபிறகு, விதையில்லாத தர்ப்பூசணி 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
குட்சு என்ற கொடியின் வரலாறு என்ன?
1876ஆம் ஆண்டு அமெரிக்கா, ஜப்பானில் இருந்து குட்சு என்ற கொடியை மண் அரிப்பைத் தடுக்க கொண்டு வந்து நட்டது. நட்ட சிறிது காலத்திலேயே கொடி வேகமாக பரவி வளர்ந்தது. விளைவாக காடுகளில் உள்ள மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு கொடியை நட்ட அமெரிக்கா, 1997ஆம் ஆண்டு நச்சுக்கொடி என சுட்டிக்காட்டி அதை அழிக்க முயன்றது. வேளாண்மை இழப்பு, மரங்களின் வளர்ச்சியை தடுப்பது என ஆண்டுக்கு ஐம்பது மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்துவதாக அரசு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. தினசரி முப்பது செ.மீ என்ற வேகத்தில் வளரும் கொடி, ஒருகட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் பரவி வளர்ந்துவிட்டது.
கேட்நிப் என்ற தாவரத்தின் சிறப்பு என்ன?
இத்தாவரத்தை பூனைக்குடும்ப விலங்குகள் விரும்புகின்றன. இதற்கு முக்கியக் காரணம், இத்தாவரத்திலுள்ள ட்ரான்ஸ் நெப்டால்ஆக்டோன். இந்த வேதிப்பொருள், பெண் இணையின் சிறுநீரைப் போன்ற வாசனை உடையது. கேட்நிப், புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. பூனைக்குடும்ப விலங்குகள் கேட்நிப் இலைகள் மீது தங்களது முகத்தை உரசி, படுத்து புரள்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக