இடுகைகள்

இத்தாலி காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெக்ஸ் வில்லர் அதிரடிக்கும் காவல் கழுகு- குற்றத்தின் தடம்

படம்
காவல் கழுகு லயன் காமிக்ஸ் ரூ.35 கதை: பொசெல்லி ஓவியம்: செய்ஜாஸ் டெக்ஸ் வில்லரின் வீரதீர பராக்கிரம கதை. இம்முறை நவஜோ தலைவரான மாண்புக்குரிய நம் தலைவர், செவ்விந்திய சகோதர ர்கள் ஸெல்காடோ, க்லானே என இருவரையும் சேர்த்து வைக்கிறார். இதற்காக பனிரெண்டு பேர்களுக்கு மேல் உயிரிழக்க வேண்டியிருக்கிறது என்பதே கதை. வெள்ளையர் பார்ரெல், அரிசோனாவின் பழங்குடிகளை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிற அரசு அதிகாரி. ஆனால் நேர்மையில்லாதவர். இவரின் ஊழல்களை அறிகிற க்லானேவைத் தீர்த்துக்கட்ட அவர் பழங்குடிகளுக்கு நீரில் விஷம் கலந்தார். நல்ல மாடுகளை தான் எடுத்துக்கொண்டு நோயுற்ற மாடுகளை அரசு கொட்டிலில சேர்த்தார். இதற்கும் புரட்சிக் குரல் கொடுக்கும் க்லானேவை காரணமாக்கி அவரின் சகோதரர் ஸெல்காடோவைத் தூண்டிவிட அவர் சல்வா ஜூடுமாவாக மாற கிளைமேக்ஸ் என்ன என்பதுதான் கதை. கதை சுபமாக முடிகிறதுதான் என்றபோதும் ஆக்சனுக்குப் பஞ்சமில்லை. கிரே வோல்ஃப், பில்லி ஜோ, சூக் ஆகியோரின் பேச்சுகளும் டயலாக்குகளும் பிரமாதம். கோமாளிமேடை டீம் நன்றி: ஓவியர் பாலமுருகன்

டைகர் ஜாக்கின் வீரதீர வாழ்க்கை- வில்லர் -டைகர் நட்பின் கதை!

படம்
டெக்ஸ் வில்லர்- டைகர் ஜாக் கலக்கும் காதலும் கடந்து போகும் முத்து காமிக்ஸ் விலை ரூ.200 டெக்ஸ் வில்லரின் நண்பர்களில் ஒருவரான டைகர் ஜாக்கின் கதை. செவ்விந்தியரான டைகர் ஜாக்கின் சோகமான வாழ்க்கையைச் சொல்லும் கதை இது.  அபாரமான உடல் பலமும், விவேகமும் கொண்ட டைகர்ஜாக், தானியா என்ற சக இன பெண்ணை விரும்புகிறார். ஆனால் அவளது திருமணத்தின்போது நடைபெறும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. இதன் விளைவாக நடைபெறும் ஆக்சன் அத்தியாயங்கள்தான் கதை. இங்குதான் இரவுக்கழுகார் வில்லரையும் டைகர்ஜாக் சந்திக்கிறார். இருவருமாக ஒரே லட்சியத்திற்கு உழைத்து எதிரிகளை ஒழித்துக்கட்டுவதுதான் கதை. காதல், திருமணம், பிரிவு, துயரம், வாழ்க்கை என பல கேள்விகளுக்கு பதில் சொல்லும்விதமாக காமிக்ஸ் கதை சும்மா பறக்கிறது. டைகர் ஜாக்குக்கும், பெண் கடத்தல் குழுக்களுக்கும் நடக்கும் சண்டைகள் உங்கள் புஜத்தை முறுக்கேற்றுகின்றன. அடிக்கும் அடியில் நமக்கு கடைவாய், எலும்புகள் எல்லாம் நொறுங்குவது போல தோன்றுகிறது. டைகர் ஜாக்கின் பாய்ச்சலான வேகம், அடிக்கும் அடி என மாஸ் நாயகனாகவே இந்த நூலில் களம் காண்கிறார். இ