இடுகைகள்

ஆதிக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...

சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

படம்
  பாண்டாவுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.  உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது.  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்ட...