இடுகைகள்

காட்டுத்தீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

படம்
  டைம் 100 கண்டுபிடிப்பாளர்கள் வரிசை காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம் கிறிஸ்டினா தாஹ்ல் 45 அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார். தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு அனஸ்டாசியா வால்கோவா 32 காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிறுவனங

கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

படம்
  ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்   ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது. ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.   அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அரசின் சூழல் பாத

வெப்பநிலை அதிகரித்தால் அதற்கேற்ப வாழ்வை திட்டமிடவேண்டும் - ஃபிரீடெரிக் ஓட்டோ

படம்
 ஃபிரீடெரிக் ஓட்டோ சூழல் அறிவியலாளர், இம்பீரியல் கல்லூரி (காலநிலை மாற்றம் - சூழல்) நீங்கள் செய்து வரும் ஆராய்ச்சியின் அடிப்படை என்ன? உலகம் முழுக்க உள்ள இயற்கைச்சூழலை மனிதர்கள் செய்யும் செயல்பாடுகள் எப்படி மாற்றுகின்றன என்பதைத்தான் நான் ஆராய்ந்து வருகிறேன்.  இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சிஸயசை தாண்டியுள்ளதை செய்தியில் அறிந்திருப்பீர்கள். இங்குள்ள சாலை, ரயில்பாதை அனைத்துமே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாண்டாதபடி திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படி இருக்க முடியாது. அதற்கேற்ப நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடலாம்.  வெப்பஅலை பற்றி உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது? உலகம் முழுக்க நாங்கள் வெப்ப அலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். வெப்ப அலை இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இதில் மனிதர்களின் தூண்டுதல் அதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. குறிப்பாக கரிம எரிபொருட்களை நாம் பயன்படுத்தி வருவது வெப்ப அலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டத்தில் அதிகரிக்க முக்கியமான க

காட்டுத்தீயிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற ஹேபிடேட் பாட்ஸ் உதவும்! அலெக்ஸாண்ட்ரா கார்தே

படம்
  அலெக்ஸாண்ட்ரா கார்தெ காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 2019 - 2020 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து சிறு விலங்குகளை பாதுகாக்க ஹேபிடேட் பாட்ஸ் என்ற சிறு கூடார அமைப்பை மெக்குவாரி பல்கலைக்கழக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கார்தெ உருவாக்கியுள்ளார்.  ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி? இயற்கை உலகம் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் பதிலைத் தேடி அறிவது எனக்குப் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது புதுமைத்திறன், பிரெஞ்சு மொழி, உளவியல் ஆகிய பாடங்களை எடுத்தேன். இது தவறான தொடக்கம் தான். பிறகு, பேராசிரியர்களின் உரைகளால் சூழலியல், முதுகெலும்பு உயிரினங்களைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.  சிறு விலங்குகளுக்கான கூடார அமைப்பை எப்படி வடிவமைத்தீர்கள்? ஹேபிடட் பாட்ஸ் எனும் இந்த கூடார அமைப்பை உருவாக்க ரீப் டிசைன் லேபைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்ஸ் கோட் உதவினார். இதற்கான முதல் கூடார அமைப்பை, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டோம். எங்களது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுயிர்  பாதுகாப்பு அமைப்பு, நியூ சௌத்வேல்ஸ் தேசிய பூங்கா ஆகிய அ

காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரங்களை இடம்பெயர்த்து நடும் கொலம்பிய வனத்துறை!

படம்
  காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழி - மரங்களை இடம்பெயர்த்து நடலாம்! உலக நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றன. இதனால், பருவகாலங்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர்,  கிரேக் ஓ நீல். இவரும் இவருடைய குழுவினரும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் உள்ள மரங்களை  வேறிடங்களுக்கு இடம்பெயர்த்து வருகின்றனர்.  முதல் பணியாக, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள லார்ச், பைன், யெல்லோ செடார், ஹெம்ஸ்லாக் ஆகிய இன மரங்களைப் பிடுங்குகின்றனர். பிறகு இம்மரங்களை, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியிலிருந்து கனடாவின் தெற்குப்புற யூகோன் எல்லை வரை நடுகின்றனர்.  ஒகனகன் பள்ளத்தாக்கு பகுதியில், காலநிலை மாற்ற பாதிப்பு தொடங்கியுள்ளது. இதனால்  நீர்பஞ்சம், கடும் பனிப்பொழிவு காரணமாக 1995-2015 வரையிலான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. அதை தடுத்து மர இனங்களைப் பாதுகாக்கவே இடம்பெயர்த்து நடுகின்றனர். . மரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொல

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!

படம்
  pixabay அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்

தட்டச்சு செய்வதை விட தாளில் எழுதுவது மொழியை கற்க உதவுகிறது - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன்  ஆஹா! புதிய தலைமுறை! ஜார்க்கண்ட் மாநிலத்தில் அழிந்துவரும் பட்டியலின மக்களுக்காக புரோஜெக்ட் ஆகான்ஷா எனும் கல்வித்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. டாடா பவுண்டேஷனின் திட்டத்தால் இம்மாநிலத்தில் 220 பழங்குடி மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். ”எங்களது கல்வித்திட்டம் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை  தேர்ந்தெடுக்க உதவுகிறோம்” என்கிறார் டாடா பவுண்டேஷனின் சமூக பொறுப்புணர்வு துறை தலைவர் சௌரப் ராய். https://www.newindianexpress.com/good-news/2021/aug/08/project-akansha-motivating-helping-out-pvtg-children-to-take-up-education-2342005.html காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடும் வீரர்கள்! இடம் கிரீஸ், வடக்கு ஏதேன்ஸ்  https://www.reuters.com/news/picture/photos-of-the-week-idUSRTXFA4BO அப்படியா!? இரண்டுமே ஒன்றுதான்! கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி போட்டுக்கொண்டாலும் கூட நோய்த்தொற்றைத் தடுக்க முடியும் என ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி அறிக்கை கூறியுள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 98 பேர்களிடம் ஆராய்ச்சி நடத்தி 18 பேர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும்,

நிர்வாகத்திறன் கொண்ட பெண்மணிகள்! - ஜெசிந்தா ஆர்டெர்ன், கமலா ஹாரிஸ், ட்சாய் இங்க் வென், செலிஸ்டா பார்பர்

படம்
              சிறந்த பெண்மணிகள் ஜெசிண்டா ஆர்டெர்ன் பிரதமர் (2017 முதல் ), நியூசிலாந்து இவரையும் அந்நாட்டின் இளமையான பிரதமர் என்று கூறப்போவதில்லை . அதைத்தாண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டவராக ஜெசிந்தா இருக்கிறார் . மக்களின் மீதான கருணை , நம்பிக்கை , சகிப்புத்தன்மை , பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் என பல்வேறு குணங்களைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கிறார் . இவரை உலகம் அடையாளம் கண்டுகொண்டது உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனில்தான் . கோவிட் 19 பிரச்னையில் ஜெசிந்தா எடுத்து உறுதியான விதிகள் , நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகள் , காட்டிய வேகத்தை ஊடகங்கள் மறக்கவே முடியாது . கிறிஸ்ட்சர்ச் விவகாரத்தில் ஜெசிந்தா பிற மதத்தினர் மீது காட்டிய நேசமும் , அக்கறையும் அரசியல் தாண்டியவை . மதவெறியை தூண்டும் பிரிவினைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை . இப்படி நாம் சொன்னாலும் இவரிடமும் சில பிழைகள் உண்டு . மக்கள் அனைவருக்குமான வீடுகளை குறைந்த விலையில் கிடைக்கச்செய்வதில் தவறியது . குழந்தைகள் வறுமையில் தவிப்பதை தடுக்க முயற்சிகள் செய்யவில்லை என்று விமர்சனங்கள் வந்து

அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!

படம்
            சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள் . உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா ? இல்லவே இல்லை . அவை தகவல்தொடர்புக்கான மொழி அது . இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார் . ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை . அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை . இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக் . இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும் . பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன . அவை தொடர்புகொள்ளும் முறை , அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர் . மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான் . ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது . எனவே , இ

மின்னலால் ஏற்படும் ஆபத்து! - காடுகளிலுள்ள தொன்மை மரங்கள் வேகமாக அழிந்து வரும் ஆபத்து!

படம்
  cc       மின்னலால் ஏற்படும் ஆபத்து ! உலக நாடுகளில் மின்னல் தாக்குதலால் ஏராளமான தொன்மை மரங்கள் அழிந்து வருகின்றன . காடுகளிலுள்ள மரங்கள் மக்களின் பரவலால் அழிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள் . அதைப்போலவே பல்லாயிரம் மரங்கள் இயற்கையாகத் தோன்றும் மின்னலால் அழிந்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா ? அமெரிக்காவின் கென்டக்கி நகரைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டீவ் யானோவியாக் இதுபற்றி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் . ஆண்டுதோறும் நடைபெறும் ஏராளமான மின்னல் தாக்குதல்களால் உலகமெங்கும் உள்ள பருவக்காடுகளிலுள்ள தொன்மையான மரங்கள் அழிந்து வருகின்றன . அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவுடன் இணைந்து , உலகமெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் . காட்டுத்தீ , பசுமை இல்ல வாயு , மரங்களின் அழிவு என நிறைய பாதிப்புகள் இதனால் உண்டாகிறது . மின்னல் எப்படி உருவாகிறது ? வெப்பமான பரப்பிலிருந்து ஈரப்பதம் நிரம்பிய காற்று உருவாகிறது . இக்காற்று குளிர்ந்து தூசி , உப்பு , புகை ஆகியவற்றை உள்ளடக்கி மேகங்