காட்டுத்தீயிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற ஹேபிடேட் பாட்ஸ் உதவும்! அலெக்ஸாண்ட்ரா கார்தே
அலெக்ஸாண்ட்ரா கார்தெ
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
2019 - 2020 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து சிறு விலங்குகளை பாதுகாக்க ஹேபிடேட் பாட்ஸ் என்ற சிறு கூடார அமைப்பை மெக்குவாரி பல்கலைக்கழக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கார்தெ உருவாக்கியுள்ளார்.
ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி?
இயற்கை உலகம் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் பதிலைத் தேடி அறிவது எனக்குப் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது புதுமைத்திறன், பிரெஞ்சு மொழி, உளவியல் ஆகிய பாடங்களை எடுத்தேன். இது தவறான தொடக்கம் தான். பிறகு, பேராசிரியர்களின் உரைகளால் சூழலியல், முதுகெலும்பு உயிரினங்களைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.
சிறு விலங்குகளுக்கான கூடார அமைப்பை எப்படி வடிவமைத்தீர்கள்?
ஹேபிடட் பாட்ஸ் எனும் இந்த கூடார அமைப்பை உருவாக்க ரீப் டிசைன் லேபைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்ஸ் கோட் உதவினார். இதற்கான முதல் கூடார அமைப்பை, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டோம். எங்களது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு, நியூ சௌத்வேல்ஸ் தேசிய பூங்கா ஆகிய அமைப்புகள் ஆதரித்தன.
எந்தெந்த விலங்கினங்களுக்காக ஹேபிடேட் பாட்ஸை உருவாக்கினீர்கள்?
பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் ஆகியவற்றைக் காட்டூத்தீ பாதிப்பிலிருந்து காப்பாற்ற நினைத்தேன். எலி, பெருச்சாளி ஆகியவை பாட்ஸைப் பயன்படுத்தியதை சோதனையில் அறிந்தோம். காட்டுத்தீ பாதிப்புள்ள இடங்களில் ஹேபிடேட் பாட்ஸ், உயிரினங்களைக் காக்கும்.
பிபிசி வைல்ட்லைஃப் மேகஸின் 2022
https://researchers.mq.edu.au/en/persons/alexandra-carthey
https://alexcarthey.com/
கருத்துகள்
கருத்துரையிடுக