ஐரோப்பாவில் பட்டு சாலை வணிகத்தடம் உருவானதா? - உண்மையா? உடான்ஸா?

 














விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப ராக்கெட்டிற்கு மாற்று ஏதுமில்லை

                                                   

உண்மை. இப்போதைய தொழில்நுட்பப்படி ராக்கெட்தான் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப உதவும் ஒரே சாதனம். இதற்கு மாற்றாக வளரக்கூடிய விதமாக வர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் 2 விண்வெளி விமானம் உள்ளது. இதே நிறுவனத்தின் லான்ஞ்சர் ஒன் செயற்கைக்கோள்  லான்ஞ்சரையும் இதேபோல குறிப்பிடலாம். ஆனாலும் விண்வெளிக்கு செல்ல ராக்கெட்டின் உதவி உறுதியாக தேவை. 

நெகட்டிவ் கலோரி கொண்ட உணவு வகைகள் உண்டு!


இல்லை. குறிப்பிட்ட வகை உணவை செரிக்க உடல் செலவழிக்கும் ஆற்றலை கலோரி அளவை, நெகட்டிவ் கலோரி என குறிப்பிடுகின்றனர். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை  இந்த வரையறைக்குள் பொருத்தலாம். இப்படி உணவு இருப்பதாக தெரியவில்லை என ஆராய்ந்த உணவு வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். செரிக்க தாமதமாகும் செலரி (celery) என்ற தாவர உணவு கூட நெகட்டிவ் கலோரி உணவு பட்டியலில் வராது. 

சில்க்ரோடு எனும் வணிகத்தடம் ஐரோப்பாவில் உருவானது!

                        

இல்லை. பட்டு எனும் வணிக வழித்தடம் சீனாவின் ஷியான் எனும் இடத்தில் தான் தொடங்கியது. பட்டு, வெடிமருந்து, அரிசி, நறுமண திரவியங்கள் ஆகியவை சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பாலிருந்து பழங்கள், தேன், துணிகள், விலங்குகள் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. பட்டு சாலை உருவாக்கப்படும் முன்னர்  தக்லமாகன் பாலைவனம், ஆப்கானிஸ்தான் என பயணித்துத்தான் ஐரோப்பாவிற்கு சென்று வியாபாரிகள்  பொருட்களை விற்பனை செய்து வந்தனர். 

தாவர இலைகள் ரோஸ் நிறமாக காட்சியளிக்க, நிறமிகளே காரணம்!


உண்மை. தாவரங்களின் இலைகள் ரோஸ் நிறத்தில் காட்சியளிக்க நிறைய காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, ஆந்தோசயானின் (Anthocyanin) எனும் நிறமி. இந்த நிறமி சூரிய ஒளியிலிருந்து பச்சை, மஞ்சள் நிறங்களை  உட்கவர்ந்து சிவப்பு அல்லது ரோஸ் நிறமாக வெளிப்படுத்துகிறது.  இத்தாவரங்களில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் குளோரோபைல் (Chlorophyll) எனும் வேதிப்பொருளும் உண்டு.  ஆனாலும், ஆந்தோசயானின் பச்சை நிறத்தை மறைத்துவிடுகிறது.  எனவே இலைகள் ரோஸ் நிறத்தில் காட்சியளிக்கின்றன. பச்சை நிறத்திலுள்ள தாவர இலைகள், திடீரென ரோஸ் நிறத்திற்கு மாறினால், அச்செடியில் பாஸ்பரஸ் பற்றாக்குறை இருப்பதாக அர்த்தம்.

வயதானவர்களுக்கு தூக்கம் குறைவது இயல்பானது!


உண்மை. சிறுவயதினர், பெரியவர்களை விட அதிக நேரம் தூங்குவார்கள். சிறுவயதில்,  மூளை, உடல் உறுப்புகள் மெல்ல வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும். உடலின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள், தூங்கும்போதுதான் சுரக்கும். வயதாகும்போது  ஒருவரின் உடலில்,  தூக்க ஹார்மோனான  மெலடோனின் (Melatonin) அளவு குறைந்துகொண்டே வரும். எனவே முதியவர்களுக்கு தூக்கம் குறைவது இயல்பானதுதான். இதில், உடலை ஒழுங்குபடுத்தும் உயிரியல் கடிகாரத்தின் பங்கும் உள்ளது. 


how it works 2021

https://www.richardlipmanmd.com/negative-calorie-foods/

https://www.healthline.com/nutrition/negative-calorie-foods#definition

படம் - தி நியூயார்க் டைம்ஸ் 

கருத்துகள்