இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

 














மொழிபெயர்ப்பு நேர்காணல்
மார்ட்டின் விக்கெல்ஸ்கி
விலங்கியலாளர்

ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான். 

ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன?

ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்க்கவில்லை. ஐரோப்பாவில் வாழும் இசைப்பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அமெரிக்காவில் இதன் எண்ணிக்கை 3 மில்லியனாக இருக்கிறது. இந்த பறவைகள் எங்கு போயின? யாருக்கும் தெரியாது. 

உங்கள் ஆராய்ச்சியில் என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடித்தீர்கள்?

ஆராய்ச்சியில் முடிவுகளைப் பார்க்கும்போது புதிய விஷயங்களை அறிந்து வருகிறோம். மக்களில் பலருக்கும் விலங்குகள் பற்றி தெரியவில்லை. அவை சுவாரசியமானவை. வெள்ளை நாரைகள், சகாராவை சீசனுக்கு ஐந்து முறை பறந்து கடக்கின்றன. இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தினசரி பல்வேறு ஆச்சரியங்களை சந்தித்து வருகிறோம். 

சில குழுக்கள் விண்வெளியில் இருந்து விலங்குகளைக் கண்காணித்து வருகிறார்களே?

நாங்கள் அதிக எண்ணிக்கையிலான விலங்குகளின் இயல்புகளை  சென்சார் மூலம் கண்காணித்து வருகிறோம். சூழலை துல்லியமாக கணிக்க முயல்கிறோம். இப்போது அந்தளவு திறனாக செயல்படும் செயற்கைக்கோள் ஏதும் இல்லை. நாங்கள் பறவைகளின் ஆற்றல், உற்சாகம், மன அழுத்தம் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறோம். 

இன்டர்நெட் ஆப் அனிமல்ஸ் என்று குறிப்பிடுவதற்கான பொருள் என்ன?

விலங்குகளை உள்ளடக்கிய தொகுப்பு. அவை மனிதர்களைப் போலவே தங்களுக்குள் தொடர்பு கொண்டு வருகின்றன. இதனை குழு அறிவு என கூறலாம். நிலப்பரப்புரீதியாக பறவைகளைக் கண்காணிக்க முயன்று வருகிறோம். இதனை நாங்கள் விண்வெளியிலிருந்து செய்கிறோம். இதன்மூலம் ஒரு பறவை எந்த இடத்தில் இறந்துபோனது, காணாமல் போனது என்பதை துல்லியமாக அறியலாம்.விலங்குகளின் அறிவு வியக்கவைக்கிறது. முதலில் இதை ஆய்வாளர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.  ஒருவகையில் விலங்குகளின் ஆறாம் அறிவை பின்தொடர்வதைப் போன்றதுதான் இது. அவை, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஆகியவற்றை முன்னதாக உணர்ந்துவிடுகின்றன. 

New Scientist 2.4.2022





கருத்துகள்