ஆற்றுத் துண்டாடலால் நடைபெறும் சேதங்கள்! - வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு கூடுகிறது!










வெள்ளத்தால் மாறும் ஆற்றின் வழித்தடம்!

2008ஆம் ஆண்டு, இந்தியா- நேபாளத்தின் எல்லையில் உள்ள கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, 30 லட்சம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் அழிந்தன.  வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே கூறாத அறிவியலாளர்கள், அரசு ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன என்பதே உண்மை. இந்த சம்பவத்தில் நாம் அறியவேண்டியது, ஆறு தன் வழித்தடத்தை மாற்றிக்கொள்வதேயாகும். 

பெரியளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகு, ஆற்றின் வழித்தடம் மாறுவதற்கு, ரிவர் அவல்ஷன் (River avulsion) என்று பெயர். தமிழில் வெள்ளத் துண்டாடல் எனலாம். ஆற்றின் வழித்தடத்தில் காலப்போக்கில் அரித்துச் செல்லும் மண்ணில் உள்ள வண்டல் கீழே படியும். இப்படி படியும் மண் ஆற்றின் நீர்ப்போக்கைத் தடுக்கும். இதனால் ஆற்றின் நீர் வேறுவழியாக செல்ல முயலும். இதனால் ஆற்றின் கரைப்பகுதிகளில் ஏற்படும் சேதம், நிலநடுக்கம் ஏற்பட்டால் உருவாவதைப் போலவே இருக்கும். கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோசி ஆறு, வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் வழித்தடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு மாறியது. ஆற்றின் வெள்ளச் சீற்றத்தால் 30 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழக்க நேர்ந்தது. 

”ஆற்றில் நடைபெறும் வெள்ள துண்டாடல் (River avulsion) நிகழ்ச்சி  அரிதானது. நூறாண்டுகளுக்கு அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது ஆகும்”  என்றார் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் முனைவர் மாணவரான ஆஸ்டின் சாட்விக். ஆற்றின் வழித்தடம் மாறுவதை செயற்கைக்கோள் படங்கள் மூலமாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  இவர்கள் வெளியிட்ட அறிக்கை, சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 1973 தொடங்கி 2020 காலகட்டம் வரையில் செயற்கைக்கோள் படங்கள் வழியாக 113வெள்ளத் துண்டாடல் சம்பவங்களை தொகுத்துள்ளனர்.  உலகம் முழுக்க ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத் துண்டாடல் சம்பவங்களால் 33 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 



Geographical july 2022

Changing course 

கருத்துகள்