எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

 












மறுசுழற்சி 


பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும். 

பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate)

பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள்

இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1.

ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene)

சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள்

இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2.

பிவிசி (PVC)- பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride)

கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல். 

இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3.

எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene)

பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் தன்மை கொண்ட பாட்டில்கள், கேபிள், கம்பிகள்

இவற்றை சற்று முனைந்து மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண்  4.

பிபி (PP) - பாலி புரப்பலீன் (Polypropylene)

பாட்டில் மூடி, ஸ்ட்ரா, உணவு பெட்டிகள், குளிர் கண்ணாடிகள், துணி, கார்பெட் இழைகள், தார்ப்பாலின், நாப்கின்கள்

இவற்றையும் முனைந்து மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 5. 

பிஎஸ் (PS) -பாலிஸ்டிரீன் (Polystyrene)

பிளாஸ்டிக் கப்கள், முட்டை பெட்டிகள், இறைச்சி தட்டுகள், துணி ஹேங்கர்கள், யோகர்ட் பாட்டில். 

இவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். இதன் அடையாள எண் 6. 

பிற பொருட்கள் (Other)

நைலான் இழைகள், குழந்தைகளின் பால் புட்டிகள், சிடி தகடுகள், மருத்துவ சேமிப்பு பெட்டிகள், கார் உதிரி பாகங்கள்.

இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 7. 


How it works book of  Oceans 



 

கருத்துகள்