கனிமவியல் பற்றி படிக்க மாணவர்களை ஊக்குவித்தவர்! விளாதிமிர் வெர்னால்ஸ்கை
விளாதிமிர் வெர்னால்ஸ்கை (Vladimir vernadsky
1863 -1945)
கனிமவியலாளர்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தேன். பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறையின் தந்தை என புகழப்பட்ட வாசிலி வாசிலியேவிச் டோகுசாவ் தான் எனது ஆசிரியர் மற்றும் வழிகாட்டி.
புவிவேதியியல் துறையை உருவாக்கியவர்களில் எனக்கும் முக்கியப் பங்குண்டு.
விளாதிமிர் கனிமவியல், புவியியல், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்டு 1887. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றவர் கிரிஸ்டல்லோகிராபி படிப்பைப் படித்தார். 1890-1911 காலகட்டத்தில் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கனிமவியல், கிரிஸ்டல்லோகிராபி பற்றிய பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ரஷ்யாவில் முதன்முறையாக கனிமவியல் பற்றி படிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்,விளாதிமிர் தான்.
ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபிறகு, கதிர்வீச்சு, அதன் ஆற்றல், பூமியில் உயிரினங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், உயிரிவேதியியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, அதனை நடத்தினார். முக்கிய படைப்பு, “Paragenesis of Chemical Elements in the Earth’s Crust” (1910), உயிர்க்கோளத்தை நூஸ்பியர் (noosphere) என்ற வார்த்தையை உருவாக்கி குறிப்பிட்டார்.
https://www.famousscientists.org/vladimir-vernadsky/
கருத்துகள்
கருத்துரையிடுக